உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இவையென்று

இளங்குமரனார் தமிழ் வளம் 22

நாட்டுதற்கு உதவியாகக் காட்டப் பட்டிருக்கின்றன. இறைவனை வாழ்த்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம் வயமின்றியே மொழிந்து விடுமாறு நேர்வித்த சிவபிரான் திருவருட்கு எங்ஙனம் நன்றி பகர வல்லேம்.

அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகம் திருக்கோவையாரிற் காணப்படும் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவை தம்மை எழுதியிருந்தனராயின் புராணக்காரர்கள் அங்ஙனம் தம்முள் மாறுகொண்டுரையார்.

புராணகாரர் உரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப்படாத குறிப்புகளை ஆராய்ந்து கண்டு எழுதுகின்றுழியும், திருவாசகம் திருக்கோவையாரின் டைமிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின்

வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவிகள் ஆயின.

இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவர் இயற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட் குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சி முறை இந்நூன் முழுவதும் ஊடுருவி நிற்றல் கண்டு கொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம்" என்கிறார்.

கால ஆராய்ச்சி :

இனிக் கால ஆராய்ச்சியின் இன்றியமையாமையையும் அடிகளார் நன்கு விளக்குகிறார்.

64

"அடிகள் இருந்த காலமும் அக்கால நிலையும் உண்மையாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றின் உண்மையும், அவர் அருளிச் செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறிய வேண்டி நிற்கும் முற்காலப் பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களில் காலங்கள் தோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழும் கலப்புத் தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்தி வந்த ஒழுக்கங்களின் உண்மையும், பிறவும் உள்ளவாறு அறிதல் இயலாது.