உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடிகளார் காட்டும் ஆய்வியல்

நெறிமுறைகள்

அடிகளார் இயற்றிய அரிய பெரிய நூல் 'மாணிக் வாசகர் வரலாறும் காலமும்" என்பது. அதில் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சி முறைகளை முகவுரையிலே விரிவாக வரைந்துள்ளார். இடை இடையும் இயம்புகின்றார். அவ்வாறே பட்டினப்பாலை முல்லைப்பாட்டு ஆகிய ஆய்வுரை முகப்புகளிலும் சுட்டுகிறார். அவர் தம் ஆய்வு நெறிமுறைகள் மேலை நாட்டவர் ஆய்வு நெறிகளை ஒப்பதுடன், தமிழின் தனித்தன்மை, தமிழர் தொல்பெரும் பண்பாட்டியல் நாகரிகம்என்பவற்றுடன் பின்னிப் பிணைந்து பிறங்கியவை என்பதைக் கண்டு கொள்ளல் தமிழ் ஆய்வாளர்க்கு நல்வழி காட்டியாம்.

ஆராய்ச்சி முறை :

"இந்நூல் எழுதுதற்குக் கைக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப் பற்றிச் சில கூற வேண்டுவது இன்றியமையாததாகின்றது" என்று அவரே திட்டப்படுத்திக் கொண்டு எழுதுகின்றார்.

மாணிக்கவாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல், அவ்வரலாறு நுவலும் நூல்களில் உள்ளபடியே இங்கு எடுத்து எழுதப்படவில்லை. ஏனென்றால், அக்குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே மற்றொரு புராணத்திற் காணப்படவில்லை. ஒன்றுக் கொன்று முரணாகவே காணப்படுகின்றன; வேறுசில ஒரு புராணத்திலின்றி மற்றொரு புராணத்தில் மட்டும் காணப்படுகின்றன. அம்மாறுபாடுகளும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக் காட்டி அவற்றுள் கொள்ளற் பாலன இவை. தள்ளற்பாலன இவையென்பதை நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம்.

இவ்வாறு காட்டும் இடங்களிலெல்லாம் திருவாசகச் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட

செ சந்தமிழ்ப்

சான்றுரைகள், அடிகளின் உண்மை வரலாற்றுக் குறிப்புகள்