உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

129

முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்பனவும், சாகுந்தல நாடக ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சிவஞான போத ஆராய்ச்சி என்பனவும் பெயரிலேயே ஆராய்ச்சியையும் இணைத்துப் பளிச்சிடுவன. மறுப்புக்கு மறுப்பு :

அடிகளார் முதற்கண் எழுதிய (1898) முதற்குறள் வாத நிராகரணம் என்னும் நூலே ஆராய்ச்சி நூலாகும். சைவ சித்தாந்த சண்ட மாருதம் எனப்பட்ட சோம சுந்தர நாயகர் நாகையில் ஆற்றிய பொழிவை மறுத்து எழுதினார்க்கு, மறுப்புக்கு மறுப்பு எழுதி மெய்ம்மை நிலை நாட்டிய நூல். அந்நூலே நாயகரை வயப்படுத்தி வைத்தது. நலம் பல சேர்த்தது. அந்நூல் கட்டுரைகள் நாகை நீலலோசனி என்னும் இதழில் "முருகவேள்' என்னும் புனைபெயரில் வெளியிடப்பட்டு நூலுருப் பெற்றதாகும்.

அடிகளார் எழுதிய முதற் கட்டுரையே மறுப்புக் கட்டுரை என்பதையும், அறிஞர்களை யெல்லாம் வயப்படுத்தி மெய்ம்மை நாட்டியது அது என்பதையும் சிவஞான முனிவர் மறுப்பனைய மறுப்பாகத் திறத்தோடு விளங்குவது எனப் பாராட்டப் பட்டது என்பதையும் அறியுங்கால், அடிகளார் எழுத்தெல்லாம் ஆய்வுத் திறப்பாடு உடையவையே யன்றிப் பிறிதல்ல என உறுதி செய்யலாம்.

ஆய்வுக் குறிப்பு :

அடிகளார் இயற்றிய சாகுந்தல நாடகம் 150 பக்க அளவில் ஏழு வகுப்புகளில் இயல்கின்றது. அந்நாடக விளக்க உரைக் குறிப்போ 100 பக்க அளவில் அமைகின்றது.

"காளிதாசர் தழுவிய உலகப் படைப்பு முறை பண்டை இருக்கு வேத வழிப்பட்டது" என்று வாழ்த்துப் பகுதியிலேயே தம் ஆய்வை ஓட விடுகிறார்.

முதன்முதல் நீரே படைக்கப்பட்டது என்பது ஆரிய வேத நூல் வழக்கு. அந்த முதற்பொருள் நீரேயாம்; அது மூச்சு இலதாய்த் தன்னியற்கையினாலேயே மூச்சு விடுவதாயிற்று என்று இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் கண்ணதான 129 ஆம் பதிகம் பாடுதல் காண்க.

அந்நீரில்இருந்தே தீயும், அத்தீயில் இருந்தே ஞாயிறும் உண்டாதலும் ஆண்டே நுவலப்படுகிறது. இவ்வாற்றாற்