உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

நுண்ணறிவு :

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

இடக்கைக் கடகத்தின் மணி தன் நிறம் மாறியதாகக் காளிதாசர் சுட்டுவது ஏன் என்பதை எண்ணும் அடிகளார் "விற்பிடிக்கும் கை இடக்கையே ஆதலால் வில்லின் நாண் உரைஇத் துசியந் தனுக்குத் தழும்பு உண்டான இடம் இடத் தோளின்கண் உளதென்பது பெற்றாம். அவ்விடத்தில் அணிந்திருந்த

ம்

கடகம் அவனது உடம்பின் மெலிவால் அவ்விடத்தை விட்டு நழுவி முன் கையில் வந்து விழுதலும் பெறப்படும். அவன் தன் கையைத் தொங்கவிட்டு உலாவுகையில் மேலுள்ள கடகங்கீழ் நழுவு மென்பது உணரற்பாற்று. அவனது கையிலுள்ள கடகத்தில் குயிற்றிய மணிகள் இப்போது நிறம்மாறி இருப்பதற்குக் காரணம், அவன் இரவிற் றுயில் கொள்ளானாய்ப் படுக்கையிற் கிடந்தச் சகுந்தலையை நினைந்து ஆற்றானாந் தோறும் அவன் கண்களினின்று பொழியும் நீரின் வெம்மை படுதலேயாம், என்று அவன் இரவின்கட் பட்ட துயரத்தினையும் அறிவித்தற்கு ஒரு குறியாக அதனைக் கூறினாரெயல்லது அவன் படுத்துக் கிடக்கையிற் றோளிலுள்ள கடகங்கழன்று கீழிறிங்கியதென்று கூறப்பு குந்தா ரல்லர்" என்கிறார் (183-4)

தவச் சாலையில் வளர்ந்த மங்கை சூழ்ச்சி யறியாள் என்று கௌதமி கூறியபோது அரசன், கற்றுக் கொள்ளாமலே வரும் திறம் என்பதைக் குறிக்கும் வகையால் தம் குஞ்சுகள் வாளின்கட் பறக்கும் வரையிற் குயிற்பெடைகள் அவை தம்மை வேறு பறவைகளைக் கொண்டு வளர்த்து வரல் உண்மையன்றோ?" என்கிறான்.

இதனை விளக்கும் அடிகளார், 'குயிற்பெடைகள் தாம் இடும் முட்டைகளை அடை காக்கத் தெரியா வாகலால், அவை தம் முட்டைகளைக் காக்கையின் கூடுகளில் இடக், காக்கைப் பெடைகள் அவற்றையும் தம்முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரித்துப் பொரித்த குயிற் குஞ்சுகளுக்குத் தங்குஞ்சுகளுக்கு ஒக்கச் சேர்த்து இரை கொடுத்து வளர்த்தமையும், வளர்த்தபின் அக்குயிற் பிள்ளைகள் காக்கையை விட்டுப் பறந்தோடிப் போதலையும் தோப்புகளில் இன்றும் பார்க்கலாம். அரசன் எடுத்துக் காட்டிய இவ்வுவமையின் வாயிலாக, மேனகைக்குப் பிள்ளையாகப் பிறந்தும் சகுந்தலை அவளால் வளர்க்கப்படாமல் காசியபரால் வளர்க்கப்பட்டு வளர்ந்த குறிப்பும் ஈண்டு நாடக ஆசிரியர் உய்த்துணர வைத்தல் காண்க என்கிறார்.