உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்.

133

நாடக நூற் குறிப்புகளிலேயே இவ்வாறு பல பல ஆய்வுத் திறங்களைக் காட்டிக் காட்டிச் செல்கிறார்.

கோகிலாம்பாள் கடிதங்கள் அடிகளார் எழுதிய புனை கதை நூல். கடித வழியாகக் கதை சொல்லும் உத்தியில் வெளிவந்தது, அதன் முகப்பிலே புனை கதை அமைப்பு, பயன்பாடு எத்தகையவாக இருத்தல் வேண்டும் என்பதை ஆராய்ந்து எழுதுகிறார்.

உலக வழக்குக்கு மாறுபடாமை உற்றவாறே எடுத்துரைத்தல்

விழுமியதாகத் தொடுத்தல்

வை புனைவாளன் கடமை எனப் புகல்கின்றார்.

உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒரு சிறிதும் காணலாகாதவைகளைப் படைக்க, அவற்றை ஆய்ந்து பாராமல் அவ்வாறே எடுத்து மொழிந்தவை பெரியதோர்

அருவருப்பானவை என்கிறார்.

ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்று என்றல்,

அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்தது என்றல் ஒருவன் பத்துத் தலையும் இருபது கைகளை உடையவனாய் இருந்தான் என்றல்,

பொருந்தாப் புனைவு

ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றக் கால் அவள் இருந்தநிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றல்,

ஒருவன் தன் கையில் இருந்த வட்டத்தைச் சுழற்றி யெறிந்து பகலவனை மறைத்தான் என்றல்,

ன்னவை மக்கள் இயற்கையில் எங்கும் எவரும் காணாதன. இத்தகைய புனைவுகளை ஒரு கதையிலாவது ஒரு நாடகத்திலாவது செய்வது நல்லிசைப் புலமை ஆகாது என்கிறார்.

புதுக் கதைகளும் நாடகங்களும் ஆக்குதலின் நோக்கம், இன்பச் சுவையினையும் அதனோடு அறிவு விளக்கத்தினையும் தந்து, அவ்வகையால் மனமாசு நீக்கி மக்கள் ஒழுக்க நெறியைத் தூய்மையாக்குவதே என்று திட்டப்படுத்துகிறார்.