உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

கடுத் தின்னாதானைக் கட்டிபூசித் தின்னச் செய்தல் போலவும்,

நீர் வேட்கையனைக் கானல் நீர் காட்டி நன்னீர் குடிப்பித்தல் போலவும்,

நூலியற்றலின் நோக்கத்தைச் சிலப்பதிகாரம் கூறுதல் போலவும் புனைவு செய்தல் வேண்டும் என்று மேற்கோள் காட்டுகிறார். அந்நெறி திகழவே நூலை நடத்திச் செல்கின்றார்.

"இனிச் சிறுவர்க்கான செந்தமிழ்" என்னும் நூலிலே, மலையைப் பற்றி எழுதும் அடிகளார்,

(C

யுடையது,

எல்லாம்

'மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை மல் என்றால் வலிமை. மலைகள் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை “ஓங்கல்”, “பிறங்கல்", பொருப்பு, வெற்பு என்றும், ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை "விலங்கல்" என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும்; மூங்கில் காடுகள் உள்ள மலையை வரை என்றும், காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும்; சிறிய மலையைக் "குன்று”, “குவடு', 'குறும்பொறை", என்றும் மண்மிகுந்த மலையைப் பொற்றை, பொச்சை என்றும், மலைப்பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும்" என்கிறார்.

ளைஞர் உள்ளத்தே மொழி வளத்தை எளிதில் ஆக்கிவிட இயலும் என்பதன் சான்று இது.

இரண்டு பண்டப் பைகள் என்பதொரு சிறுகதையைச் சிறுவர்க்கு வரைகின்றார் அடிகளார்.

"ஒவ்வோர் ஆடவனும் தனக்கு முன்னே ஒரு பையும் தனக்குப் பின்னே ஒரு பையும் தொங்க விட்டுக் கொண்டு செல்கின்றான்; அவ்விரண்டு பைகளிலும் குற்றங்களாகிய பண்டங்களே நிறைந்திருக்கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடைய குற்றங்களை நோக்கும் கட்பார்வையுடையராயும், தம்முடைய குற்றங்களைப் பாராக் கண்ணில் குருடராகவும் இருக்கின்றனர் என்கிறார்.

பெரிய அறிவுரையை, எளிய காட்சிக் கதையால்விளக்கி விடுகிறார் அடிகளார்.