உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் ன

135

அடிகளார் இயற்றிய நூல்கள் என்னும் இப்பகுதியிலே ஒரு நாடக நூலையும், கதை நூலையும், சிறுவர் நூலையும் எடுத்துக் கொண்டு எழுதுவானேன் என்னும் வினா எழும்பலாம். சுவைமிக்கதாகவும் எளிமையானதாகவும் எழுத வேண்டிய நூல்களிலேயும் ஆராய்ச்சித் திறம் வெளிப்படச் செய்யும் அடிகளார், ஆராய்ச்சி நூல்களில் எவ்வாறு ஆழ்ந்து சென்று மூழ்கி முத்தெடுப்பார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இங்கு இப்பகுதி எழுதப்பட்டதாம்.

அடிகளார் நூல்களை இலக்கியம், சமயம், அறிவியல் என முப்பாலுள் ஒரு வகையாக அடைவு செய்து விடலாம். அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளின் அளவுப் பெருக்கமாம் என்பதால், வகைக்கு ஒரு நூலாக எடுத்துக் கொள்ளுதல் சாலும் அவ்வகையில் இலக்கிய ஆரய்ச்சி வகையில் "பட்டினப் பாலை" ஆராய்ச்சியைக் காண்போம்.