உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இலக்கிய ஆராய்ச்சித் திறன்

பட்டினப்பாலை ஆராய்ச்சி

1906 ஆம் ஆண்டில் கலைநூற் புலமை மாணவர்க்குப் பாடமாக வைக்கப்பட்ட நூல் பட்டினப் பாலை. அது பத்துப் பாட்டுள் ஒன்பதாம் பாட்டு. பத்துப் பாட்டுக்கும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை உண்டு. அவர், செய்யுள் இயற்றிய ஆசிரியர் கொண்ட முறைக்கு மாறாகச் செய்யுளில் உள்ள சொற்களையும் சொற்றொடர்களையும் தமக்குத் தோன்றியவா ரெல்லாம் முன் பின்னாக மாற்றி உரை கூறியிருந்தார். நச்சினார்க்கினியர் உரையை முதற்கண் விளக்கி, அதன்பின் ஆசிரியர் கொண்ட பொருள் முறையே வைத்து அடிகள் மாணவர்க்குப் புத்துரை கூறினார். ஆங்கில நூல் உணர்ச்சியால் பகுத்தாராயும் அறிவு ஆற்றல் வாய்ந்த அம்மாணவர்கள், "நச்சினார்க்கினியர் உரை செய்யுளுக்கு இசையவில்லை' என்றும், அடிகள் புத்துரையே செய்யுளுக்கு மிக இசைந்து ஆ. ஆக்கியோன் கருத்தை விளக்குவதாய் அமைந்தமையுடன் பயிலுதற்கு எளிதாய் இருத்தலையும் கூறினர். பதிப்புச் செலவைத் தாமே ஏற்றுக் கொண்டு பதிப்பிடவும் செய்தனர். அதற்கு முன்னர் 1903 ஆம் ஆண்டில் கலைநூற் புலமை மாணவர்க்குப் பாடமாக இருந்த "முல்லைப்பாட்டு' உரை அச்சீடும் பட்டினப்பாலைக்கு முன்னோடியாம்.

66

ஆராய்ச்சி உரை :

59

"தாம் எழுதிய அவ்வாராய்ச்சியுரைகளைப் போன்றது ஏதும் அதற்குமுன் தமிழில் எவராலும் எக்காலத்தும் எழுதப்பட்டதில்லை. தமிழின் அருமையை உணர்தற்கு வழி அறியாமையால் தமிழைப் புறம் பழித்து வந்த மாணவர், எமது ஆராய்ச்சியுரையினைச் சிறிது பயின்ற அளவானே அதன்கண் அவா மிகுதியும் கொண்டு, அதனை விரும்பிக் கற்கலாயினர். தமிழ்ப் புலவர்களிற் பலரும் அவ்வாராய்ச்சியுரையினைப் பார்த்து வியந்து மகிழ்ந்து அதனைச் சிறந்தெடுத்துப பாராட்டி எமக்குத் திருமுகங்களும் எழுதி விடுத்தனர்" என்கிறார் அடிகள்.