உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பல்வகை வண்ணங்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சி பார்வைக்கு மிக அழகாக உள்ளது. பல்வகை பண்பாடுகளைப் பின்பற்றிவரும் மக்கள் இனங்கள் ஒருசேர வாழ்வதைக் காணும்போது மகிழ்ச்சி தருகிறது. வரலாற்றுத் தொடக்க காலம் முதல் இக்காலம் வரை பல்வேறு இனமக்கள் தத்தமக்குரிய பண்பாட்டைத் தத்தமக்குரிய உணவு, உடை, உறையுள், மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் அடுத்துவரும் தலைமுறையினர்க்கு எடுத்துச் செல்கின்றனர்.

.

இருபதாம் நூற்றாண்டு மிக வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் நூற்றாண்டு. மனிதன் எல்லா எல்லைகளையும் மீறிக்கொண்டு வளர்ந்து வருகிறான். தனக்குள்ள பண்பாட்டையே மறந்து வருகிறான். நாடு என்கிற எல்லையை மீறி எல்லோரும் எல்லா எல்லா நாடுகளிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று எந்த எசுக்கிமோக்களும் இக் குழுவில் வாழ்வதில்லை. தனிமனித இனத்தின் குறியாகத் திகழும் உணவு, உடை, உறையுள் எல்லாவற்றிலும் உலக முழுவதும் ஒத்த சீரான போக்கு வளர்ந்துள்ளது. அந்தந்த இனத்திற்குரிய பண்பாடு மட்டும் ஒரு சில இடங்களில் மீறப்படாமல் உள்ளது. மொழியைப்பற்றிய நிலையும் இதுவே. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தம் சிறார்களுக்குத் தமிழைக் கற்பிப்பதில்லை. தமிழ் அறியாத் தமிழர்கள் தரணியெங்கும் உருவாகி வருகிறார்கள்.

இச் சூழலில் ஒரு மொழியைக் காப்பாற்றி வருகிற தலைமுறையினர்க்கு அளிப்பது என்பதே பெருஞ்செயலாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட முன்னைப் பழையமொழியாம் தமிழ், தமிழ் நாட்டிலேயே பல தமிழர் “அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே"

என்பது நன்னூற் பாயிரம்!