உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ் வளம் 22

'மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை யுடையது. 'மல்' என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன." என்பது அடிகளார் தரும் மலை விளக்கம் (சிறுவர்க்கான செந்தமிழ்-4)

“நீடிருங் குன்றம் நிழல்காலும் மண்டிலத்துக் கோடு கோடாய்த் தோன்றும்'

-

என்பது சிலம்பு. மலையைக் காட்டும் - முற்றாக அதே அளவில் அதே நிலையில் படம் பிடித்துக் காட்டும் ஆடியும் உண்டோ? அதே நிலைதான், அடிகளாரின் இவ் வரலாற்று நிலையும்!

மலையின் வரலாறு, இயற்கையோடு இயைந்த தன்றோ! இத் தகுமலையின் வரலாறும் இயற்கையோடு இயைந்து செல்லும் தலைப்புகளைக் கொண்டமை பார்த்த அளவாற் புலப்படும்.

ஒன்பான் பகுதிகளைக் கொண்டது இவ் வ் வரலாறு. முதற்பகுதி 'குயிலிசை'; அடிகளார் தம் வளமாளிகையின் சூழலில் வள்ளலார் பாடலை இசைத்ததும், அவர்தம் தவமகளார் தூண்டலால் தனித்தமிழ் இயக்கம் கண்டதும் இப் பகுதி ஆகும். அடிகளார் இசை, மகளார் இசை, சை, தனித் தமிழ் இசை, வள்ளலார் இசை எல்லாமும், குயிலிசை தழுவல் பொதுமைய.

-

-

'பள்ளியெழுச்சி' என்பது விழிப்பு பிறப்பு ஒலிப்பு படிப்பு இன்னவெல்லாம் தழுவிய வரலாற்றினது. மூன்றாம் தலைப்பாகிய 'தமிழ்த்தேனீ' என்பது பள்ளிப் படிப்பை விடுத்த அடிகளார் தனிப்படிப்பும் பொத்தக வணிகர் நாராயணசாமியார் வழியே கற்ற கல்வியுமாம்! "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்த” தகையது அது!

C

மணமலர்' என்பது காதல் மணமும், கல்வி மணமும் பரவிய நிலையாகும்.

ஐந்தாவதாகிய 'பூஞ்சோலை' அடிகளார் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராகக் கடனாற்றிய காலத்துச் செய்திகளாகும். மாணவர் வளாகம் என்பது பூஞ்சோலை வளாகம்தானே! அவரினும் இளவள மலர் உண்டோ?