உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

www.

3

அடிகளார் கல்லூரிப் பணியை விடுத்துப் பொது நிலைக்கழக நிறுவனராய் ஆசிரியராய் அடிகளாராய்-த் தென்னகமும், வடவகமும், ஈழவகமும் உலாவந்த செய்திகள் 'தென்றல் உலா'

னிய

அடிகளார் இயற்றிய நூல்கள் எத்தகைய இனிமையும் வளமையும் வாய்ந்தவை! அவை 'தேனருவி' யல்லவோ! "தேனருவி வழியும் மூலையில் நாலைந்து தென்னமர உயரத்தில் வட்டமான ஒரு பெருந்தேனடை இருந்தது. அவ்வளவு பெரிய தேன் அடையை யாம் வேறு எங்குமே கண்டதில்லை. அதன் குறுக்களவு சிறிது ஏறக்குறையப் பத்து அடி இருக்கும். அதன் நிறஞ்சிறு சிவப்பாய் இருந்தமையால் அது, காலையில் எழும் பகலவன் வடிவை ஒத்திருந்தது. அத் தேனடையின் பக்கத்துள்ள மூலையில் இருந்து அருவி நீர் வீழ்தல்பற்றியே அதனைத் தேனருவி என வழங்குகின்றனர் என்றும், எக்காலத்துமே அத்தேனடை அங்கு இருக்கும் என்றும் எம்முடன் வந்தார் சொல்லக்கேட்டேம்" என்பது குற்றாலமலையில் அடிகளார் கண்ட தேனருவிக் காட்சி! (சிறுவர்க்கான செந்தமிழ் 10) பழகப் பழகப் பாலும் புளிக்கும் பன்னீராண்டானால் தேனும் புளிக்கும் என்பது பழமொழி! அடிகளார் நூல் என்றும் 'உவட்டாமல் இனிக்கும்' தேனருவியன்றோ!

எட்டாம் பகதி உதிர் மலர்! அடிகளார் புகழுருவாகிய பகுதி அது.

நிறைவில் உள்ள 'புகழ் மாலை' அடிகளாரைக் குறித்த உரையும் பாட்டுமாம் நறுமலர்த் தொடையலாய் அமைந்தது. நினைவகங்களும் புகழ் மாலையைச் சேர்ந்தவையே!

-

தமிழ் உணர்வுக்கு தமிழின உணர்வுக்கு அடிகளார் வரலாறு வைப்பகம்! வளநிலம்! அவர் நூல்களைக் கற்றால் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வாய்க்கும்.

"யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள். என்பது அடிகளார் எழுத்து (மறைமலை அடிகள் கடிதங்கள் பக்)

இவ்வினிய வரலாற்றை எழுதத் தூண்டியவர்கள் கழக ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்கள். னைக்கவும் சொல்லவும் எழுதவும் இனிமை மல்கும்