உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம்

228

'பாட்டுச் சென்ற வாறே எளிதிலே பொருள கொள்ளக் கிடக்கும் இவ்வடிகட்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இவற்றை ஓரியைபுமின்றிக் கையினுங் கலத்தினும் மெய்யுறத்தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக் கொடாஅ திருஞ்செருவின் என்னும் எழுபது எழுபத்திரண்டு எழுத்து மூன்றாம் அடிகளோடு சேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டு வந்து கொழும்பல்குடிச் செழும்பாக்கம் என்பதனொடு கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார், இங்ஙனம் பொருளுரைத்தல் பாட்டின் வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிறிதென்னை? என்கிறார்.

இவ்வாறே 59 - 74 ஆம் அடிகளின் பொருள் முறையைக் கண்டு நச்சினார்க்கினியர் உரையை ஓரியைபுமின்றிக் கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார் என்றும், போலியுரை கூறினார் என்றும், பெரியதோர்இடர்விளைத்துப்பாட்டின் பொருணயஞ் சிதைத்தார், இவர்போல் இங்ஙனம் உரைக் குழப்பம் செய்வார் பிறரை வேறுயாண்டும் கண்டிலம் என்றும் வருந்தியுரைக் கின்றார்.

193 - 212 ஆம் பொருளியைபைக் காணும் அடிகள், அவ்வாறு இயைத்தது தீம்பாலுணவிருப்ப அதனை உவர்த்தொதுக்கி அறிவு மயக்கும் கள்ளுண்பார் திறனோ டொப்பதாயிற்று" எனத் துன்புறுகிறார்.

அடிகள் சால்பு

நச்சினார்க்கினியரை இவ்வுரைப் போக்கால் வருந்தி யுரைக்கும் அடிகளின், செந்தண்மையுள்ளமும் புலப்படாமல் போகவில்லை.

66

"நச்சினார்க் கினியர் உரை கூறாவிடின் இப்பத்துப பாட்டுகளின் பொருள் விளங்குவது அரிதேயாதல் பற்றியும், இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ் நூல்கட்கு அரிய பெரிய தண்டமிழுரை வகுத்தது பற்றியும் இவரை நெஞ்சார வழுத்தி இவர்க்குத் தொண்டு பூண்டு ஒழுகும் கடப்பாடு மிகவுடையேமாயினம், இவர் வழுவிய இடங்களிலும் இவரைப் பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலை யாகாதாகலின் இவர் தம் வழூஉக்களைக் களைந்து திருத்திய பின் இவரைச் செந்தமிழ் மாமுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவோம் என்க" என்று எழுதும் பகுதி இவர்தம்