உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

145

அவற்றுள் ஓரிரு இடங்களைக் கண்ட அளவானே, அடிகளார் கொண்ட வரைமுறை இயல்பாக நூலாசிரியன் கருத்தொடும் ணைந்து செல்லுதல் விளக்கமாகும்.

“அகனகர் வியன்முற்றத்துச் சுடர்நுதன் மடநோக்கி

னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்

கோழி யெறிந்த கொடுங்காற் கனங் குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும்

விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்

கொழும் பல்குடிச் செழும்பாக்கம்”

என்னும் பகுதி இப்பாடலின் 20 முதல் 27 ஆம் அடிகளாகும்.

இவ்வடிகளின் பொருளாக, "பாக்கங்களிலே அகன்ற வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவ்வீட்டு முற்றங்களிலே உலர வைத்திருக்கும் நெல்லுக்குக் காவலாய் இருக்கும் சிறுபெண்கள் ஒளி விளங்கு நெற்றியும் கள்ளம். அறியாத பார்வையும் திருந்திய அணிகலன்களும் உடையர். இவர்கள் அந்நெல்லைத் தின்ன வரும் கோழிகளை வெருட்டும் பொருட்டு எறிந்த சுறவுக்குழைகள் அம்முற்றத்திற் சிதறிக் கிடந்து, அங்கே சிறுபையன்கள் மூன்று உருள் உடைய சிறிய தேரைக் குதிரையின்றி இழுத்துக் கொண்டு வருகையில், அதன் உருள்களை இடறி அச்சிறு தேர் போகாமல் வழிமுன்பை விலக்குகின்றன. தாம் மனங் கலங்குவதற்குக் காரணமான பகை தமக்குச் சிறிது மில்லாமையால் மனக் கொழுமை யினையுடைய பல குடிகள் நிறையப் பெற்றிருக்கின்றன அப்பாக்கங்கள் எல்லாம்." என்று அடிகளார் வரைகின்றார் (33) இவற்றுக்கும் வேண்டும் உரைவிளக்கக் குறிப்புகளையும் வழங்குகின்றார் (81-82)

சுடர் நுதல் மடம் நோக்கின் (21) நேரிழை மகளிர் உணங்கு உணா கவரும் (22) கோழி எறிந்த கொடு கால் கனம் குழை (23) பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் (24) முக்கால் சிறுதேர்முன் வழி விலக்கும் (25) அகல் நகர்வியன் முற்றத்து (20) குறும்பல்லூர் (28) என்று கொண்டு இஃது இருஞ்செருவின் (72) விலங்குபகையல்லது கலங்குபகை யறியாப் பாக்கமென மேலே கூட்டிற்று" என்று உரைவரைகின்றார் இனியர்.