உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம்

228

சடுதியில் தம் பரிவாரங்களையும் பாண்டியன்பால் திருப்பி விட்டனர் என்னும் நம்பியார் கூற்று ஆராய்ந்து செய்யாக் குற்றத்தை அடிகள்பால் ஏற்றுவதாய் முடிதலானும், எதனையும் தீரத்தெளிந்து செய்யும் அமைச்சியற்றிறத்தில் தலைநின்றார் அடிகள் என்பது இருபுராணங்களுக்கும் உடன்பாடாகலின், அவரது அத்தன்மைக்கு இழுக்காகாமல் அவர் தம் ஆசிரியனால் அடிமை கொள்ளப்பட்ட பின் தாம் மேற்கொண்டு வந்த வினையை மறந்திருக்க அப்பரிவாரங்கள் தாமாகவே அவரை அகன்று பாண்டியன் பாற் சென்றன என்று மற்றத் திருவாதவூரர் புராணங் கூறுதலானும் என்பது. தம் செயலற்றுச் சிவன் செயலாய் நின்று உலகியல் நிகழ்ச்சிகளை மறந்திருப்பாரைக் குற்றங் கூறுவார் யாண்டும் இலர். பேய் பிடியுண்டாரையும் வெறிபிடித்தாரையும் தம் கடமைகளின் வழீயினார் எனக் குறைகூறுதல் எவர்க்கும் உடன்பாடன்று என்று தீரத் தெளிவாய் உறுதியுரைக்கிறார்.

உளவியல், சட்டத்தின்முன் மதிப்பீடு செய்யப்படுதல் உண்மையை உளங்கொள்வார் இவ்வாய்வுரையின் தெளிவு காண்பார்.

பரிவாரங்கள் அகன்ற பின் பெருந்துறைக் கோயிலுள் மணிவாசகர் புக ஆங்கே அடியார் புடை சூழ மெய்க் குரவனைக் கண்டார் என்கிறது நம்பி திருவிளையாடல் திருப் பெருந்துறையில் ஒரு சோலையின் பால் அறிவு நூல் ஓதும் ஒலிகேட்டு அதனை ஒற்றரை ஏவியுரைத்து அவர் வந்து உரைத்தன்பின் குரவனையும் அவனைச் சூழ்ந்த அடியார் குழாத்தையும்கண்டார் என்கிறது வாதவூரர் புராணம். இவ்கூற்றிலேயும் நம்பிதிருவிளையாடல் பிழைபடுகிறது என்கிறார் அடிகளார்.

குருந்து: கோயில் : திருப்பெருந்துறையில் அடிகள் சென்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்ததில்லை என்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் ல்லாமையும், ஆண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகர் பெருமாற்கும் அவரை ஆண்டருளிய ஆசிரியன் வைத்துச் சென்ற திருவடிச் சுவட்டிற்குமே ஆற்றப் படுதலும் திருவிழாவென்னும் சிறப்பு வழிபாடு மாணிக்க வாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க என்கிறார்.