உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

151

மேலும் அடிகள் இறைவன் ஆசிரிய வடிவிற்றோன்றி கொண்டருளியமையையே சொல்வதல்லாமல்

அடிமை

திருக்கோயில் உண்டெனக் கொண்டு திருப்பதிகங்கள் அருளிச் செய்யாமையையும் நிறைமலர்க்குருந்தம் மேவிய சீர் ஆதியே என்றமையயுைம், அடிகட்கு அருட்பாடு நிகழ்ந்த பின்னரே திருக்கோயில் அமைக்கப்பட்டது என்பதையும் கூறுகிறார்.

அடிகட்கு முன்னும் ஆங்குத்திருக்கோயில் உண்டு என்னின், அதன்கண் இந்நாள்வரை சிவலிங்கம் இல்லாமையும், அடிகட்குமுன் இருந்ததாயின் ஆங்குச் சிவலிங்கம் திருந்திருத்தல் வேண்டும் என்றும் முன்னே இருந்து பின்னே இல்லை என்பது பொருந்தாது என்றும் கூறி, திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாம் என உறுதிசெய்கின்றார்.

சிவஞானபோதம் முதலியன : குரவன் கையில்" சிவஞான போதம் இருந்தது என்பது கட்டிச் சொன்னது என்றும், குரவன் பன்னாள் நிலமிசைத் தங்கினான் அல்லன் ஐந்தெழுந்துண்மை உணர்த்திய ஞான்றே மறைந்தருளினன் என்றும், அடிகள் அன்பின் வடிவாய் மனந்திரிந்து நின்ற நாளில் அரசன் செல்வத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டமை குற்றமாகாது என்றும் அறப்பணிக்குத் தானே அளியாது போர்ப் பகைக்குச் செலவிட இருந்த பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட ஏவியது இறைவர்க்கும் இழுக்காகாது என்றும், அப்பாண்டிய மன்னன் இறைமையிற்கனிந்த வரகுணன் அல்லன் என்றும் அடிகள் திருத்தொண்டில் அவர்தம் மனைவியாரும், அருமை மகளாரும் ஒன்றி நின்றனர் என்றும், திருவெம்பாவை அந்நாளில் அவர்கள் பொருட்டாகத் திருப்பெருந்துறையிலே அருளிச் செய்யப்பட்டது என்றும், நரிபரியாக்கியமை அடிகட்கே அன்றிப்பிறர்க்கன்று என்றும், அடிகளைச் சிறைப்படுத்தி வருத்தியது திருவாதவூரிலேயே என்றும், அடிகளை வருத்துங்கால் குயிற்பத்துப்பாடப்பட்டது அன்று என்றும், பரிமேல் வந்த பாகனைக் கண்டு காதல் கொண்டார் உரையாக அன்னைப்பத்து பாடப்பட்டது அன்று என்றும், பாகற்குப் பாண்டியன் நல்கிய துகிலைச் செண்டுகோலின் வாங்கினான் என்பதே சரி என்றும் குதிரைப் பாகன் மன்னனிடம் விடைபெற்றுச் செல்லும் போது பாடப்பட்டதன்று பிடித்த பத்து. இது தம் இல்லம் சென்று பாடியது என்றும், இறையருளால் வையையில் வெள்ளம் வந்தது எனக் கொள்ளாமல், அறிவில்லா மழையால் வெள்ளம் அடிகட்கு இரங்கி வந்தது ஆகாது என்றும், ஒரு கூடை மண்ணால்