உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

228 பேருடைப்பை அடைத்து மறைந்து இறைவனைப் பிரிந்த துயரால் செத்திலாப் பத்துப்போலும் சில பதிகங்களை அடிகள் பாடினார் என்றும், திருமுதுகுன்றம்; திருவெண்ணெய் நல்லூர் என்னும் திருப்பதிகளுக்குச் சென்று அடிகள் வழிபட்ட சான்று இன்று என்றும், ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொரு கால் ஒன்றும் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுகளே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத்தும் வகுத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை யெல்லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா என்றும் கூறுகிறார்.”

புத்த

மெய்ப்பொருள் : புத்தரொடு சொற்போர் தொடங்குதல் சமயக் கோட்பாடுகளை மறுத்தல், சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல், சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி, நால்வரே நல்லாசிரியர்கள், பொருந்தாக் கொள்கைகள், பௌத்த குருவுக்கு விளக்கிக் காட்டிய உண்மைகள் ஆகியவை முற்றிலும் மெய்ப்பொருள் ஆய்வேயாம். இவ்விரிவுப்பகுதிகள், அடிகளே திருவாசகத்தின் அகச் சான்று கொண்டு எழுதிய தாகும். இதனை திருவாதவூரர் புராணத்திற்காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்தெழுதி, அங்ஙனம் எழுதிய சைவ சமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவே யாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச் செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் ரு நூல்களிலிருந்து மேற்கோள்களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம்" என்கிறார்.

164 பக்கங்களில் மாணிக்கவாசகர் வரலாறும் ஆராய்வும் நிகழ்ந்ததாகவும், அது தொட்டு 942 பக்கம்வரை கால ஆய்வுச் செய்தியே விரிகின்றதாம்,

கால ஆய்வு : வாசகன் என்னும் சொல்அடிகளையே உணர்த்துதல், நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாமை, திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல், சிவனடியார் பலர் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படாமை, திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை, திருக்கோவையாரின் செய்யுட் பொருள் பழந்தமிழ் நூல்களோடு ஒத்தல், வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது, கடைச்சங்கம்

ல்லையாய்ப் போன காலம், திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்துள்ளமை, பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும்