உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

153

ஒடுங்கியதும், வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல், சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை, கட்டிப்பாடும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல், மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லாதல், மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும், சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை, நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றிய ஆராய்ச்சி, திருமங்கையாழ்வார் காலம், பழைய வடநூல்களில் சிவ பெருமான் முழுமுதன்மை, பன்னீராழ்வார் களின் காலவரையறை, மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலம், முச்சங்க வரலாறும் தொல்காப்பிய காலமும், தொல்காப்பிய காலத் தொடர்ச்சி, இறையனாரகப் பொருளுரை யாராய்ச்சித் தொடர்பு, கடைச்சங்க காலத் தொடர்ச்சி, திருத்தொண்டத் தொகையும் திருவாதவூரடிகளும், அப்பர் சம்பந்தர் இருந்த கால ஆராய்ச்சி, மாணிக்கவாசகர்காலத் திட்ட முடிவு என 28 பகுப்புகளில் மாணிக்கவாசகர் கால லத்தை ஆராய்ந்து முடிவு செய்கிறார்.

அப்பர் தேவாரச் சான்று : தேவார மூவர்க்கு மாணிக்க வாசகர் முன்னவர் என்பதனை உறுதிப்படுத்துதற்கு வலுவான சான்றுகளாக அப்பரடிகள் தேவாரத் தேவாரத் தொடர்களைக் காட்டுகின்றார் அவை :

அப்பரடிகள் "நரியைக் குதிரை செய்வானும்" என்றது மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்ந்த திருவிளையாட்டே என்பது ஒன்று.

"மணியார் வைகைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமும் தோன்றும்" என்று அவர் கூறியது மாணிக்கவாசகர் பொருட்டாக இறைவன் மண்சுமந்த திறம் உரைப்பதே என்பது மற்றொன்று.

"குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டாய்” என்று அவர் கூறியது அடிகள் பெயராகிய வாசகன் என்பதே என்பது இன்னொன்று று.

நிறைவுக் குறிப்பாகப் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலிபிடவூர் பேணும் என அவர் பாடுவதில் உள்ள பெருந்துறை என்பது மாணிக்கவாசகர்க்குக் குரவனாக இறைவன் அருள் செய்த தலமே என்பது பிறிதொன்று.

இவற்றால் அப்பரடிகளின் காலத்திற்கு முன்னவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.