உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

சங்க காலத்தை அடுத்தே இருந்தார் என்பதை மறுக்கிறார். அடிகளார் பாடிய விருத்தப்பா என்னும் பாவினம் சங்க காலத்தை அடுத்தே இருந்த தில்லை என்று மறுக்கிறார். இனி அப்பரடிகளின் காலத்தை ஒட்டிய ஐந்தாம் நூற்றாண்டாகவோ ஆறாம் நூற்றாண்டாகவோ இருத்தல் ஆகாது என்றும் மறுக்கிறார். அடிகளின் பாடல்களில் விருத்தப்பா அரிதாக வழங்கப்படுதலும், கலித்துள்ளலும் அகவலும் பல்கிவரலும் அப்பரடிகள் காலத்தை ஒட்டியிருந்தமைக்குப் பொருந்துவ தாகாது என்கிறார்.

"பல்வேறு வகையாலும் உண்மைச் சான்றுகள் என்னும் மணிக்கற்கள் கொண்டு அடிப்படை கோலி, அவற்றின்மேல் எழும்பிய மாணிக்கவாசகர் காலம் என்னும் விழுமிய மெய்ம்மணிக்கோயில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி முதற்றிகழ்ந்து, சைவ மெய்ச் சமயத் தெய்வமும் செந்தமிழ்த் தெய்வத் தனிமகளும் ஒருங்குகூடி மெய்யறிவுச் செங்கோல் ஒளியரசு நடத்தும் மாப் பெரு நிலையமாய் நிலைபேறுற்று நிலவுமாம் என்க'

19

ச்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் இச் செந்தமிழ்த் தனிப்பேர் ஆராய்ச்சி நூல், தொண்டை நாட்டுப் பல்லவபுரத்துத் தமது பொது நிலைக் கழகத் திரு மாளிகையில் நாகைகிழார் மறைமலையடிகளால் இயற்றப்பட்டது. ஓம் சிவம்' என நூலை நிறைவு செய்கிறார்.

...

ஆய்வு விரிவு : இத்துணை விரிவாகக் கால ஆய்வு செய்வது அடிகளார் அடித்தளத்தில் இருந்தது இல்லை என்பது முதற்கண் அவர் கட்டுரையளவாக எழுதியமை கொண்டு அறியலாம். அதன் மறுப்பே, அதனைச் சற்றே விரிக்கத்தூண்டி ஒரு கட்டுரை மேலும் எழுதச் செய்தது, அடிகளார் கொண்ட மேற்கோள்கள் சான்றுகள் ஆகியவற்றைச் சுட்டியே விரிவான மறுப்பாகத் தமிழ் ஆராய்ச்சி நூலாரும் (Tamil studies) தமிழ் வரலாறுடையாரும் எழுதியமையும், பிறர்பிறர் பிறர்பிறர் ஆய்வு மறுப்புகளும், தூண்டுதலாகவே இப்பேராய்வை அடிகளார் மேற்கொண்டார் என்பது ஆங்காங்கு வரும் மறுப்புரைகளால் தெளிவாகப் புலப்படுகின்றது. அவர்களை எதிர்ப்பக்கத்தவர் என்றே பல்கால் குறிப்பிடுதல், தமக்குள்ளாக ஊன்றியிருந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டுதற் குறிப்பை வெளிப்படக் காட்டும். அன்றியும் தமிழ் வரலாறுடையாரே அடிகளார் கருத்தை முழுவதாக மறுத்து எழுதினார் என்பதும், அதற்குத்தக்க