உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

155

விரிவான மறுப்பாக இக் கால ஆராய்ச்சியைச் செய்ததுடன் பல்வேறு இலக்கியக் கால ஆராய்ச்சியும் இதன் கண்ணே செய்தார் என்பதும் எங்கெங்கும் காணப்படுகின்றன.

ஆய்வு நுணுக்கம் : இப்பெரிய ஆய்வின் இடையே பற்பல நுண்ணிய ஆய்வுக்கருத்துகைள அடிகளார் வெளியிடு கின்றார். அவற்றை முழுமையாகத் திரட்டல் பலதுறைப் பயன் விளைவாக அமையும். இவண் ஒரு சிறுபகுதி இவ்வாய்வுக்குத் தகக் குறிப்போம்.

"புராணங்கள் எழுதினோர் மிகுந்த ஆராய்ச்சியுடையார் அல்லர்முன்னுள்ள ஒரு புராணம் ஒன்றைச் சொன்னால் பின்வருவோர் அதனை ஆராய்ந்து பாராமல் அதனை அங்ஙனே கூறிவிடுவர். முன்னாசிரியர் மொழிகட்கு ஏற்பவே பின்வந்த புராணகாரர் கூற்றுகட்கு உரைசெய்ய வேண்டும் என்று ஓராய்வு முறையைத் தெளிவிக்கிறார் (167-8)

பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியரின் உரைமுறையை ஆராய்ந்து பார்க்குங்கால் சங்கத் தமிழ் இலக்கியங்கட்குப் பிற்பட்ட காலத்தெழுந்த நூல்களில் இருந்து மேற்கோள்காட்டுதல் அவர்கள் கருத்தன்று என்பது தெற்றென விளங்கும் என்றோர் உரைமரபை வரைகின்றார் (179)

ஆகுபெயருள் அணுக்கப் பொருள் ஆகுபெயர், அகல் பொருள் ஆகுபெயர் என்னும் இரண்டனை “தாரம்” என்னும் சொல்லாய்விடையே சுட்டுகிறார் அடிகளார்.

ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதலுக்காகி வருதலும் ஒரு நிறத்தின் பெயர் அந்திறத்தினையுடைய பொருட்கு ஆகி வருதலும் அணுக்கப் பொருளுடைய ஆகுபெயராம் என்னை? சினையும் அதன் முதலும், பண்பும் பண்பியும் ன்றைவிட்டு ஒன்று பிரியாத தற்கிழமைப் பொருள்களாய் இருத்தலின். மருக்கொழுந்து என்னும் ஓர் உறுப்பின் பெயர் அதனையுடைய நீலப்பூவுக்கும் பெயராகி வரும்.

னிக் கங்கையின்கண் வேடச்சேரி,கட்டில் கூப்பிட்டது

கங்கைக்

என்றாற் போல்வனவற்றுட் கங்கை என்பது கரையினையும், கட்டில் என்பது கட்டிலுள்ளாரையும் உணர்த்துவதற்கண் இயற்பெயர்ப் பொருட்கும் ஆகுபெயர்ப் பொருட்கும் அத்துணை நெருக்க மின்மையின் அவை அகன்ற பொருட்கண் வந்த ஆகுபெயராயின என அரிய இலக்கண ஆய்வு செய்கின்றார்.