உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம்

228

இசையின் இலக்கணங்களெல்லாம் தமிழ் நூல்களிலிருந் தெடுத்தே வடமொழிக்கண் எழுதப்பட்டன என்று வடமொழிக் கண் முதன்முதல் இயற்றப்பட்ட இசையிலக்கண நூல்கள் கூறுதலை எடுத்துக்காட்டி விளக்குகின்றார் (191)

தமிழில் இது காறும் அகராதி எழுதினோர் மொழிநூல் வரலாற்று நூல் என்னும் இவற்றின் உணர்வு வாய்க்கப் பெறாதவர் ஆகையால், இப்பொருளில் இச்சொல் தமிழ், மற்று இப்பொருளில் இஃது ஆரியம், இச்சொல் இன்ன காலத்து இப்பொருளில் வழங்கிற்று என்றெல்லாம் அவ்வச் சொற் பொருண்மை ஆராய்ந்து காட்டும் அறிவாற்றலுடைய ரல்லர்; மற்றுத் தமிழினும் ஆரியத்தினும் தாம் கண்ட கண்ட பொருள் களையெல்லாம் தாம் குறித்த சொற்களுக்குக் கூறி ஏட்டை நிரப்பி விடும் நீரர் என அகராதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணித்திறனைச் சுட்டுகிறார்.(193 -194)

பாணபத்திரர் என்பாரைத் திருநீலகண்ட யாழ்ப் பாணராகப் "பாணர்' என்னும் பெயர் கொண்டு மயங்கியமை போலவே, "சேரன்" என்னும் குறிப்புக் கொண்டு பரிபுரக் கம்பலை யிரு செவியுண்ணும் குடக்கோச் சேரனைத்தம்பிரான் தோழரான சேரமான் பெருமாண்மேல் ஏற்றிப் பெரிய புராணம் உரைத்தமையும் (188)

"திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாகக் கூறும் பெரிய புராணச் செய்யுட்கள் இரண்டும், பாண பத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இட்டாற்போற் றிருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கும்இட்டான் எனக் கூறவிழைந்த எவராலோ மாற்றிச் சேர்த்து விடப்பட்டனவா மல்லது ஆராய்ச்சியில் வல்ல அருளாளரான ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டன அல்ல" என்பதையும் குறிப்பிட்டுத் தம் ஆழ்ந்த ஆய்வைப் புலப்படுத்துகிறார்.(200)

தமிழ்ச் சொல் விழுக்காடு

தமிழ்ச் சொற்களின் விழுக்காடு காட்டித் திருவாசகத்தின் காலத்தை உறுதிப்படுத்தும் அடிகளார் அதனை நன்கு விளக்குகிறார்.

திருவாசகம் முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க முதன்மையாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம். இவற்றுள் முந்நூற்று எழுபத்து மூன்று