உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

157

நூறு

வட சொற்கள். இவற்றை வகுத்துப் பார்த்தால், சொற்களில் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச் சொற்களும், மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவலாயின என்பது புலப்படும். திருச்சிற்றம்பலக் கோவையாரிற் சமயப் பொருள் மிக விரவாமல் பெரும்பாலும் தமிழ் அகப்பொருளே விரவி நிற்றலால் அதன்கண் நூற்றுக்கு 5 விழுக்காடே வட சொற்கள் கலந்து காணப்படுகின்றன என்று கூறும் அடிகளார், ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த நூல்களில்வடசொற்கள் இருபது விழுக்காடும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இந்நாள் வரை எழுந்த நூல்களில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வடசொற்களும் நிலைபெற்று விட்டன என்கிறார்.

பண்டைத் தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்ல மெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதால் நன்கு விளங்கும் எனச் சொல்வழியே நிறுவுகின்றார். (215)

காலப்பகுப்பு:நில நூலார் நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும், அவ்வப் படைகளிற் புதைந்து கிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து, அவ்வப் படைகள் உண்டான காலத்தையும் அவற்றில் உலவிய உயிர்கள், அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள்,அப்பண்டங்களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல்போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும், தனித்தமிழ் உண்டானது முதல் இது வரையிற் போந்த காலத்தையும் துருவிப் பார்ப்பராயின், அது பல படைகளாய்ப் பிரிந்திருக்கவும், அப்படைகளிற் புதைந்து கிடக்கும் தமிழ் நூல்கள் அவ்வக் காலப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்கள் இயல்பையும் தெற்றெனக் காட்டவும் காண்பார்கள் என்றுகூறும் அடிகளார். எமதாராய்ச்சிக்கு விளங்கிய அளவு அக்காலத்தைத் தனித்தமிழ்க் காலம், புத்தகாலம், சமண காலம், சைவ வைணவ காலம், பார்ப்பனக் காலம், ஆங்கிலக் காலம் என ஆறு கூறாக வகுக்கின்றோம் என்கிறார்.(223)

பாரதப் போர் நிகழ்ந்த போது உடனிருந்த முடிநாகராயர் காலம் தொட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற