உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

-

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

காலம் தனித்தமிழ்க் காலம்; கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு காலம் - புத்த காலம்; கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை - சமண காலம்; கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை சைவ வைணவ காலம்; கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பார்ப்பனக் காலம்; கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுவரை சென்ற காலம் ஆங்கிலக் காலம் எனப் பகுத்துக் காட்டுகிறார் (223)

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த “திருவெழு கூற்றிருக்கை” என்னும் ஓர் அகவலைத் தவிர வேறு அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்னும் தூய பழந்தமிழ்ப் பாக்கள் முற்றும் வீழ்ந்து போக அவற்றினின்று பையப் பையத் தோன்றி வளர்ந்து வந்த புதுத் தமிழ்ப் பாக்களே முற்றும் நிலை பெற்றுப் பெருகி வழங்கினமை ஐயமின்றித்தெளியப்படும்என்று கூறித் திருவாசகம் அதற்கு முற்பட்டதா தலையாப்பியலால் உறுதிப்படுத்துகிறார். (232) கல்வெட்டு

"இறந்துபட்ட மறவர்க்குத் தவிர அரசர்கள் தம் பெரும் பீடும் எழுதித் தமக்கும் கல்நாட்டினரென்பது பழைய தமிழ் நூல்களில் யாம் ஆராய்ந்த பகுதிகளில் யாண்டும் கண்டிலேம்' என்றும் நாளும் பொழுதும் பிறரால்அலைக் கழிவுற்ற வடநாட்டின் இயல்கல்வெட்டுத்தேவையை ஆக்கியதையும், தென்னாட்டுக்குப் பிறநாட்டார் அலைக்கழிப்புத்தமிழ் வேந்தர் ஒற்றுமையும் பேராற்றலும் கொண்டு பட்டமையும் அவர்புகழெல்லாம் இலக்கியமாகித் திகழ்தலும் தென்னாட்டில் பழங்காலக் கல்வெட்டுகள் இல்லாமைக்கு ஏதுவாயிற்று என விரிவாக விளக்குகிறார் (238-42) வரகுணன் :

விலக்கப்

பெரிய அன்பின் வரகுணன் என்பான் மாணிக்க வாசகர் கால வரகுணன் அல்லன், அவன் இவ்வரகுணன்போல் இறைவன் பால் அன்பில்லாதவனாவன். இருவரும் ஒருவராமெனக் கொள்ளல் ஆகாது என்பார் (235)

கால மயக்கம் :

"நரியைக் குதிரை செய்வானும்' என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியதை இறந்த கால நிகழ்ச்சியாகக் கொண்டு அப்பரடிகளுக்கு முற்பட்டவர் மாணிக்கவாசகர்என்பதை மறுப்பாரை, "இறந்த 'இறந்த காலத்தில் நிகழ்ந்ததொன்றனை