உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

159

எதிர்காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர்காலத்தின் நிகழற் பாலதொன்றனை இறந்த காலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ் வழக்கின்கண் உண்மை,

"இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்

சிறப்பத் தோன்றும் வழங்கு மொழிக் கிளவி'

என்று ஆசிரியர் தொல்காப்பியனார்கூறியமையையும் அதன் உரைகளையும் பிறர் சான்றுகளையும் கூறி, அக்கூற்றுப் பெரியதோர் இழுக்கு என மறுக்கின்றார் : (283)

சமணர், பற்றிய குறிப்பு இன்மை :

மாணிக்க வாசகர் வாக்கில் சமணரைப் பற்றியோ, பல்லவரைப் பற்றியோ குறிப்பு இல்லாமை அவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை நிலைப்படுத்தும் என்கிறார் (288-9)

பிள்ளையார்

திருமந்திரத்தில் 47 செய்யுட்கள் மூவாயிரத்தின்மேல் காணப்படுகின்றன. திருமந்திர முதற் செய்யுள் ஒன்றவன் தானே என்பது எனச் சேக்கிழார் உரைத்தாராகவும் அதற்கு முன் போற்றிசைத் தின்னுயிர், என்னும் செய்யுளும், அதற்கு முன் "ஐந்து கரத்தனை" என்னும் செய்யுளும் காணப்படுதல் பின்னவரால் சேர்க்கப்பட்டவையாம். மாணிக்கவாசகர் நூல் களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு எட்டுணையும் இல்லை. ஆனால் தேவாரத்தில் உள்ளதாகலான் இக்குறிப்பு ஒன்றுமே ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர்முன்னவர் என்பதை நாட்டுதற்குப் போதிய சான்றாம் என்கிறார் (352)

மந்திரம்:

மந்திரம் என்பது மறைத்துச் சொல்லுதல். மறைமொழி என்பதும் அது. இப்பொருளில் பழைய ஆரிய நூல்களில் வழங்குதல் யாண்டும் கண்டிலேம். இது தமிழ் நூல் வழக்கே என்பது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”

எனத் தொல்காப்பியம் கூறுதலால்புலப்படும் (385)