உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ் வளம்

22

அகத்தியரைப் பற்றிய கதைகள் எல்லாம் கட்டி வைத்த பொய்க் கதைகள். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்த நூல்களிலும் உரைகளிலும்புராணங்களிலும் மட்டுமே அக் கதைகள் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் பாயிரத்தில் அகத்தியரைப் பற்றியுள்ள செய்தி நக்கீரனார் உரைத்ததன்று. பிற்காலத்தே சேர்க்கப்பட்டதாம்.(390-1)

அகத்தியர் :

பன்னிரு படலம் அகத்தியர் மாணவர் பன்னிருவர் செய்தது என்பது கட்டுக் கதையே. இக்கதையை நம்பிக் கூறிய புறப் பொருள் வெண்பா மாலைப் பாயிரவுரை உண்மை யற்றதாம் (392)

சிற்றகத்தியம் பேரகத்தியம் என்பவற்றின் போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத்தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வர் (394)

இராமாயணத்தின்கட் சொல்லப்பட்ட கதையை உண்மை யென்று நம்பத் தலைப்பட்டமையால் வந்த குழறு படைகட்கு ஓர் அளவே இல்லை (396)

திருவாதவூரடிகளாலும் திருமூலராலும் சொல்லப்பட்ட தமிழ் ஆகமங்களே, பின்னவர்களால் காமிகம் காரணம் என மொழி பெயர்க்ப்பட்டுள்ளன (406-7) அவை தச்சுக் கலை பற்றிய பழந்தமிழ் நூல்களே (408)

சான்றுவகை :

அகச்சான்றும்

புறச்சான்றும் என

சான்றுகள் இருபாலனவாம். அவற்றுட் புறச்சான்று என்பன பற்றும் பகைமையும் இல்லா நடுநிலையாளர் கூறும் மெய்யுரைகள். அகச்சான்று என்பன ஓர் ஆசிரியன் தான் இயற்றிய நூல்களில் தன் குறிப்பின்றியே தன் வரலாற்றினையும் தன் இயற்கை யினையும் கூறிவைப்ப, அவைதாம் அறிவுடை யோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்டு அவ்வாசிரியன் வரலாறும் தன்மையும் துணிதற்குச் சான்றாய் நிற்பன. இவ் வகையில் நம்மாழ்வார் பிறந்த பொழுதே பாலுண்ணாது தவத்தில் இருந்து ஓதாதுணர்ந்தமைக்குக் குறிப்பு இருவகைச் சான்றுகளிலும் இல்லை. திருஞானசம்பந்தர் பாலுண்டு பாடினார் என்றால், நம்மாழ்வார் பாலுண்ணாது பாடினாரென்பது கழிபெரு