உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

161

மேன்மையாமெனக் கதை கட்டிய புலவர் நினைத்தார் போலும்

(410 - 2)

பழந்தமிழ் நூற்பொருளும் சொல்லும் நம்மாழ்வார் பாடல்களில் காணக் கிடத்தலால் அவர் ஓதி உணர்ந்ததும், ஞானசம்பந்தர் பாடல்களில் அவ்வாறு காணக் கிடவாமையால் அவர் ஓதாதுணர்ந்தவர் என்பதும் புலப்படும், (4-20)

இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள் களும் இருந்தன என்பது பழைய இராமாயணப் பகுதிகளில் பெறப்படவில்லை. கபிலரது குறிஞ்சிக் கலிப்பாட்டில் தவிர எங்கும் அவன் பத்துத் தலையுடையவனாய் இருந்தான் என்பது சொல்லப்படவில்லை, (472)

முதலாழ்வார் மூவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், எட்டாம் நூற்றாண்டின் நடுவுக்குப் பின்னும் இருந்திலர் என்பதே முடிந்த பொருளாம். (499)

சுந்தரர் வயது :

சுந்தரர் இரண்டாம் நந்திவர்மன் இறுதிக் காலம் முதல்அவன் மைந்தன் தந்திவர்மன் காலத்தின் முற்பகுதி வரை இருந்தார். இவர் காலம் கி.பி. 760 முதல் 810 வரையாம். திரு முறைகண்ட புராணம் 38000 பதிகம் அருளியதாகக் குறித்தலானும், இவற்றைத் திருக்கோயில்கள் தோறும் சென்று அருளிச் செய்வதற்கு முப்பத்தைந்து ஆண்டுகளாயினும் வேண்டும் ஆதலாலும், இறையருளால் 16 ஆம் ஆண்டு முதல் பாடத் தொடங்கியிருந்தாலும் 50 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். இவர் 18 ஆண்டு மட்டுமே வாழ்ந்தார் என்னும் ஒரு விடுதிப் பாட்டின் கூற்றுப் பொய்க் கூற்றாம் (510-2) என்று இன்னவாறு, பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்துகிறார். ஆய்வு விரிவு :

பழைய வட நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை கூறப்பட்டதையும், பன்னீராழ்வார்களின் கால வரையறையையும், மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலத்தையும், "முச்சங்க வரலாறு, தொல்காப்பியர் காலம் என்பவற்றையும் திருத்தொண்டத் தொகை, அப்பர் சம்பந்தர் இருந்த காலம் என்பவற்றையும் விரிவாக ஆராய்ந்து மாணிக்கவாசகர் காலத்திட்ட முடிபு செய்கின்றார்.