உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 22

கடைச்சங்க காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் முடிந்தது. அதனையே உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறை என்று மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவை (20) யில் பாடினார். அவர் பாடிய சங்கம் பின்னர் எழுந்த சமண சங்கம் அன்று (597)

தொல்காப்பியர் குறிக்கும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பன கதிரும் தீயும் திங்களுமே யாம் (656) பண்டைத் தமிழர் இவற்றை வணங்குதற் குறியாக அம்மூன்றின் வடிவு போன்ற குண்டங்கள் வெட்டுவித்து வேள்வி வேட்டனர். (663)

இந்நாளைத் தமிழர் ஆங்கிலர் வழிப்பட்டமை போலவே, அந்நாளைத் தமிழருள் பலர் ஆரியர் வழிப்பட்டு அவர் ஒழுகலாறுகளைக் கொண்ட தமிழ் வழக்குக்கு முழு மாறாய் நின்றனர். (694)

"நூலே கரகம்" என்னும் நூற்பாவில் குறிக்கப்பட்ட நூல், கலை நூலே அன்றிப் பூணூல் அன்று (707)

உயிர்களை இட வகையால் (வளி, தீ, நீர், மண்) நால்வகைப் பட வகுத்துக் காட்டுதலேயன்றி, அறிவு வகையால் ஆறாகப் பகுத்துக் காட்டுதல் சமணர் கருத்தாதல் கண்டிலம் (718) விசும்பு ஒன்று உள்ளமை ஆங்குக் குறிக்கப் படவில்லை. (720)

புத்த சமண ஆசிரியர்கள் தாம் இயற்றும் நூல்களின் முகப்பில் புத்தனையும் அருகனையும் வணங்காதிரார். தொல்காப்பியத்தில் அவ்வாறு வணக்கம் இல்லாமையொடு அவற்றைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத்தானும் காணப்படவில்லை

(722)

இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில் காணப்படும் சகடம், சடை, சண்பகம், சமம், சமழ்ப்பு, சமைப்பின் எனச் சகர முதற்றமிழ் மொழி களையும், ஞமன் என்னும் ஞகர முதற்றமிழ் மொழியினையும், தமிழில் வாரா என்ற தொல்காப்பியர் கி.மு.முப்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் ஆவர் (724)

சிலப்பதிகார மணிமேகலைப் பெருந்தமிழ்ப் பாட்டுடைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வகுத்தற்கும் கடைச்ங்க காலத்தை வகுத்தற்கும் நுறுங்காவைரவாள் போல் நின்று உதவுவது இலங்கை மன்னன் முதற்கயவாகுவின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதாம் (802)