உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

ஊன் உண்ணா உயிரிகளின் தூய்மை, வலிமை முதலிய வற்றையும் ஊன் உண்ணும் உயிரிகளின் தூய்மை இன்மை, வன்மை இன்மை முதலியவற்றையும், ஊன் உண்ணாதார் நெடிய வாழ்வு நலவாழ்வு ஆகியவற்றையும் பல்வேறு சான்

விளக்குகின்றார்.

று களால்

நோயிலா நெடுவாழ்வு : நோயில்லா நீண்ட வாழ்க்கை என்னும் கட்டுரை தனிநூலாம் தன்மையது. (214-332) மலக்குடல், சிறுநீர்ப்பை, வியர்வைத்துளை, மூச்சுப்பை என்னும் நான்கு கழிகால்களின் வாயிலாக உடம்பைத் தூய்மை செய்யும் செயன்முறைகளை ஒவ்வொருவரும் தாமே செய்து நலங்கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார். யாமெடுத்துக் காட்டும் முறைகளைத் தழுவி, அவற்றைக் கருத்தாய்ச் செய்வார்க்கு எத்தகைய மருந்தும் உட்கொளல் வேண்டப் படாது என உறுதி கூறுகின்றார். தாம் கண்டு தெளிந்த மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள் பலவற்றை இப்பகுதியில் விளக்குகிறார்.

குளிர்காய்ச்சல், முறைக்காய்ச்சல், நச்சுக்காய்ச்சல்

முதலியவற்றுக்கு ஆட்பட்டவர்கள் மிகவும் கசப்பான நிலவேம்பை நறுக்கி உழக்குத் தண்ணீரில் இட்டு அரையாழாக்காகச் சுண்டக் காய்ச்சி வடித்துக் காலை மாலை அச்சாற்றைப் பருகிவரின் எத்தகைய காய்ச்சலும் நீங்கிவிடும் என்கிறார். தலையில் இருந்து அடிவரையில் வரும்ஒவ்வொரு நோய்களையும் தீர்க்கும் முறை காட்டுவாம் எனத் தொடங்கி கண், மூக்கு, வாய், செவி, கழுத்து, பிடர், நெஞ்சு, மூச்சுப்பை, வயிறு, குடல், விலா, சிறுநீர்ப்பை, விரை, தொடை, கால் ஆகிய உறுப்புகளில் உண்டாகும்நோய்களை நீக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்து உடல் முழுதும் வரும் சொறி சிரங்கு, படை, கட்டி, ஆகியவற்றையும் உரைக்கிறார். மண்மருத்துவம், நீர்மருத்துவம், பச்சிலை மருத்துவம் என்பவற்றுடன் ஆங்கில மருத்துவ முறைகளையும் ஆங்காங்கே எடுத்துரைக்கிறார்.

மனநிலையும் நீண்ட வாழ்க்கையும் பெருகவே பேசுகின்றார். (333 -413)

என்பதையும்

நோய் கொண்டார் ஒருவர் அந்நோய்த் துன்பத்திலேயே தமது மனத்தைச் செலுத்தச் செலுத்த அந்நோய் மிகுதிப்படுதலும், அதனை நினையாது இனிய இசைகளைக் கேட்டலிலும் சிறந்த நாடகக் காட்சிகளைக் காண்பதிலும் கவர்ச்சிமிக்க கதைகளைப் பயில்வதிலும் கருத்தை அவர் ஈடுபடுத்தப்படுத்த அந்நோய்த் துன்பம் விலகி நலம் உண்டாகும் என்பதைத் தெளிவிக்கிறார்.