உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

173

சொல் அகராதி என ருவகை அகராதிகளை உருவாக்கும் வகையில் சொல்லாக்கமும் மொழியாக்கமும் செய்துள்ளார் அடிகளார்.

C4

'உணவு உண்பது உடலைப் பாதுகாப்பதன்று. உண்ட உணவிலுள்ள சாறுகள் அத்தனையுஞ் செந்நீரிற் கலந்து உடம்பிற் சேருவதே அதனை பாதுகாப்பதாகும்" என்றும் மருந்து அறியாமலேயே வெறும்பட்டினி கிடத்தலாலும், மலக்குடரை நாடோறு கழுவிவிடுதலாலும் குறிகளை நீராவியிற் காட்டி நன்றாய் வியர்க்க வைத்தலாலும் எத்துணைக் கடுமையான நோயும் விலகும்படி செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் மரம் செடி கொடிகளின் பயனான இலை காய் கனி விதை கிழங்கு முலானவைகளேயாம்.

பூ

மக்களேயல்லாமல் அசையும் பொருள்களாகிய எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை உணவான அசையாப் பொருள்களாகிய பயிர்பச்சைகளேயாம் என்பதை விரிவாக விளக்குகிறார்.

அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்ன முயலுங்கால் மெலியது தனதுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மிகவும் விரைந்தோடித் தப்பிப் பிழைப்பதனைக் கண்டு அறிகின்றோம்" என ஒரு சான்று காட்டுகின்றார்.

கிறித்தவ மறையும் மக்களுக்கும் விலங்கு பறவை முதலிய உயிர்களுக்கும் மரம் செடி கொடி புற்பூண்டுகளை இறைவன் அருளியதாகக் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார்.

புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் அசைந்து திரியாவாய் நிற்றலும், அவற்றின் இலை பூ காய் கனி விதை முதலியவற்றை அசைந்து திரியும் உயிரிகள் தின்னவரும் போது அவை அவற்றோடு சண்டையிடக் காணாமையாலும் இயங்கும் உயிரிகளுக்கு இயங்கா உயிரிகள் உணவாகத் தக்கவை என்பதை உணரலாம் என்கிறார்.

ஊன் உணவின்றி, இயங்கும் உயிர்கள் எல்லாமும் வாழலாம். ஆனால் புற்பூண்டுகளும் அவற்றின் பயனும் இன்றி மற்றை எந்த உயிரும் உயிர் வாழல் முடியாது என்பதை விளக்கப்படுத்துகிறார்.