உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

185

2-9-1927 மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது.சாதி வேறுபாடு பாராட்டாமல் அனை வருக்கும் விருந்திடப்பட்டது.

5-6-1928 திரு. இராமசாமி நாயக்கரும் அவர்தம் கட்சியினரும் செய்துவரும் கடவுள் மறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பது குறித்துக் கலந்துரையாடினோம்.

22-7-1928 இராயப்பேட்டை பால பக்த சன சபையில் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் பொருள் பற்றிப் பேசுகையில், இராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடுகளையும் அவர் தம் சுயமரியாதை இயக் கத்தின் குறும்புகளையும் வன்மையாகக் கடிந்து கூறினேன்.

4-1-1932 சாதியில் உழலும், இந்திய மக்களுக்காகக் காந்தியடிகள் அடிக்கடி சிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூட நம்பிக்கை, பார்ப்பன வழிபாடு முதலானவற்றில் உழன்று சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக்குரிய தகுதி இல்லை.

5-12-1947 சேர்ந்து வாழ விருப்ப மில்லாமல் இந்துக்களும் சுலாமியரும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்புணர்வையும் அருள்வானோ?

ஈசன்

என்றே

இக்குறிப்புகளால் அடிகளாரின் பரந்துபட்ட பார்வையும் முற்போக்கான எண்ணங்களும் கடவுள் மறுப்புக் கொள்கையை ஒப்பாக் கடுமையும் புலப்படுகின்றன. சாதி வேற்றுமை ஒழிப்பு, பெண் விடுதலை, கைம்மை மணம், கண்மூடித் தனத்தைக் கருதாமை என்பன வெல்லாம் அடிகளாரின் உட்கிடையில் இருந்தமை வெளிப்படுகின்றன. நாட்குறிப்பில் குறிப்பாக உள்ள இச்செய்திகள் நூல்களில் விரிவாக இடம் பெற்றன. இதனாலேயே அடிகள் சைவம் வைணவம் சமணம் புத்தம், கிறித்தவம், சுலாமியம் என்னும் பல்வேறு சமயங்களையும் ஆய்ந்த பேரறிஞர்" என்கிறார் அரசு. - (ம.அ. வரலாறு 128)

அடிகளார் அன்பர்களுக்கு வரைந்த கடிதங்களிலும் இத்தகு குறிப்புகள் இடம் பெற்றது உண்டு. சான்றாகக் காண்க.