உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம்

228

24-1-1913 மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

16-4-1913 கல்கத்தாவில், "சாங்கியமும் சித்தாந்தமும்" என்னும் பொருள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.

29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங் கினேன். இசாவசியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

4-5-1914 பொள்ளாச்சி தாசில்தார் நெல்லையப்ப பிள்ளைக்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும், பிரம்ம ஞான சபையில் அதிக ஆர்வம் கொண்டு வீணாக அதனை நம்பி வருகிறார்.

13-9-1914 திராவிடன் இதழின் நேற்றைய பதிப்பில்,"சிறு தேவதைகட்கு உயிர்ப்பலியிடலாமா?" என்னும் என் கட்டுரை வெளிவந்தது.

3-4-1918 (ஐரோப்பியப் போர்ப் பேரழிவு நோக்கக்) கிறித்துவின் சமயம் முழுத் தோல்வியடைந்துள்ளது என்றாகின்றது. 3-3-1919 சைவர் அசைவர் என்ற பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் கூடா என்று எண்ணுகிறேன். மரக் கறி உண்போரின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும்.

3-9-1921 பஞ்சமர்க்கும் பிறசாதி இந்துக்களுக்கும் இடையே நிலவும் பகைமையும் மலபார் மாப்பிள்ளைமாரின் சீற்றமும் வருந்தற்குரியன.

24-12-1927யாழ்ப்பாணத்தில்

கைம்பெண்களுக்கு

எளிதில்

திருமணம் நடக்கிறது. அவர்கள் திருமண முறிவு பெற்று ம் மறுமணம் செய்து கொள்ளலாம். இது ஒரு நல்ல முறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர்.

5-6-1924 சைவம் வைணவம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாடுகளை விளக்கி எழுதினேன்.

27-4-1926 கல்வியும் சமயப் பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம்.