உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

183

மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அனைத்தும் நம் முயற்சியையே சார்ந்துள்ளது.

14-1-1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பாளர்

செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடு உடையர்.

6-8-1910 விவேகானந்தரின் “கர்ம யோகம்" என்னும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக்கள் தவிரவிவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன.

31-1-1911 மார்ச்சு 31 உடன் பணிக்காலம் முடியும் என்ற செய்தி, துறவறம் பெறலாம் என்ற எண்ணமுடையவனாக இருப்பினும் சிறிது கலக்கத்தைத் தந்தது.

25-6-1911 திருக்கழுக்குன்றப் பூசாரிகள் சொல்வது போல் கழுகுகள் காசியில் இருந்து வரவில்லை. அருகில் இருக்கும் குன்றுகளில் இருந்தே வருகின்றன. அவை பழக்கப்படுத்தப் பட்டவை என்று எண்ணுகிறேன்.

27-8-1911 துறவிக்குரிய துவாராடை புனைந்தேன். 24-12-1911 சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன்.

2-2-1912 இராமலிங்க

(வடலூரில்)

சபையில் அடிகள் சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளையே மீறிச் சடங்குகளை வேண்டுமென்றே சில வைதிகர்கள் தந்நலத்துக்காக நுழைத்தனர் என்று கடிந்து பேசினேன்.

26-3-1912 விவேக பாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதி வேறுபாடுகளைச் சாடிக் கட்டுரை எழுதி வருகிறேன். சாதி முறையை அழித்து மனிதரிடையே சமன்மை கொண்டு வர வேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகளுக்கு ஈசன் அருளட்டும்.

3-4-1912 போலிச் சைவரும் சாதி வேறுபாடும் என்னும் கட்டுரை எழுதி முடித்தேன்.