உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

7-1-1899 குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக்களை இந்துஸ்தானி முன்ஷி வாயிலாக அறிந்து கொண்டேன்.

13-1-1899 கி.பி. 986 - இல் வைணவ சமயப் பெரியார் இராமாநுச் ஆசாரியார் பிறந்தார்.

3-3-1900 இராமகிருஷ்ணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன்.

3-12-1900 வேதமோக்த சைவ சித்தாந்த சபையைத் தொடங்கு வதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன்.

25-3-1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்தில் இருந்து பெற்றேன். 22-12-1901 விவேகானந்தரின் பக்தியோகம், கர்மயோக்ம, ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன்.

2-2-1903 சிவனடியார் திருக்கூட்டச் "சைவப் பிரசாரகராக இருக்க இணங்கினேன்"

24-6-1903"சைவ சமயமே சமயம்" என்று உரையாற்றினேன். 5-6-1905 பாலகங்காதர திலகரின், வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன்.

13-6-1905 விவேகானந்தரின் ஞானயோகம் வாங்கிப் பயின்றேன். நுண்ணியவையாகவும் அருமையாகவும் இருந்தன.

2-12-1905 ஈசோப நிடதத்திற்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன்.

15-4-1906 இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாம்.

22-12-1906 பிராணாயாமம் பற்றிய உரையை எழுதினேன்.

27-1-1907 தவத்திரு. இராசானந்த சுவாமிகள் எனக்கு நிட்டை அருளினார்.

27-11-1907 சிவஞான போதத்துக்கு உரை எழுதத் தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன்.

10-8-1909 ஈசனும் உமையுமே என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன். கடவுளிடம் வேண்டுவதன் மூலம் மாற்றப் பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத்தில் உள்ளது. மேன்மை பெற்ற ஆன்மாக்களான கடவுளரால்