உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

ஒழுங்கியல் :

181

அடிகளார் எந்த ஒன்றிலும் ஓர் ஒழுங்கு முறையர். நாள்வழிக் கடமைகள் ஆகட்டும், கூட்ட நிகழ்ச்சிகள் ஆகட்டும் - எல்லாம், திட்டப்படுத்திய ஒழுங்கில் இயலச் செய்பவர்.

ன்ன செயலில் அடிகளார் ஈடுபட்டுள்ளார் என்றால், அது இன்ன பொழுது, என்று கண்டு கொள்ளத் தக்க கால ஒழுங்கினர்.

இன்ன பொருள் இன்ன இடத்தே தான் இருக்க வேண்டும் என்று திட்டங் கொண்ட இட ஒழுங்கினர்.

விளக்குத் துடைத்தலா, புத்தகம் தூசி துடைத்தலா, எழுத்துப் பணி புரிதலா எல்லாமும் நெறிப்பட இயற்றும் செயல் ஒழுங்கினர்.

நுண்மாண்

நுழைபுலத்தால் எதனையும் எண்ணி, எண்ணத்தின் வரைபடம் உள்ளத் தோவியமாய்த் திகழ, ஆர அமர எழுத்தோவியமாகப் படைத்து, கலப்பும் பிழையும் வாரா வண்ணம் கவினுற அச்சிட்டு எல்லாமும் எப்பொழுதும் கலை மணம் கமழும் வகையில் செய் நேர்த்திச் செம்மலாய்த் திகழ்ந்தவர் அடிகள். இவற்றின் ஒட்டு மொத்தப் பார்வையும் அவர்தம் சமய நோக்குக்கு வைப்புகளாகத் திகழ்ந்தனவாம்.

அடிகளார் சமய நோக்கு இன்னது எனத் திட்டப்படுத்த வாய்க்கும் சான்றுகள் பலப்பல.நாட்குறிப்பு, கடிதம், நூல், வாழ்வு என்னும் நான்குமாம்.

அடிகளார் தொடர்ந்து நாட்குறிப்பு வரைந்தவர். அவர் தம் சமயநோக்கு எத்தகையது என்பதைக் கையில் கனியெனக் காட்டுவது அக்குறிப்பு. கால வரிசையில் அவற்றைக் காணும் போது அவர் தம் சமய நோக்கு விரிந்த வகையும் விழுப்பமும் புலப்படுகின்றன.

5-1-1898 சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன். 7-1-1898 பகவத் கீதையைத் தமிழ்ப் பாடல் வடிவில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

23-1-1898 UIT LD

காதிறு நாவலரின்

சிலப்பதிகாரப் பாடம் நடத்தினேன்.

சகோதரர்க்குச்

24-4-1898 தமிழ்ச் சைவ சித்தாந்த சபை தொடங்குவது குறித்துக் கலந்து பேசினோம்.