உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ் வளம்

சமயச் சால்பர் அடிகள் :

228

இவ்வாறு யாம் பிடித்ததே பிடி. கொண்டதே கொள்கை என்னாமல், பல்லபல சமயங்களையும் ஆய்ந்து நல்னவெல்லாம் நடைமுறைக்காவன என்று மேலேறி நின்ற சான்றோர்களும் உளர். அத்தகு சான்றோருள் ஒருவராக மறைமலையடிகளார் திகழ்ந்தார். கந்த கோட்டம், திருத்தணிகை, திருத்தில்லை என்றெல்லாம் திருக்கோயில் வழிபாட்டில் திளைத்த வள்ளலார் பெருமான், "என் மார்க்கம் சன்மார்க்கம்; அதுவே உலகுக்கு நன்மார்க்கம்" என்று, ஏறுதற்கு அரிய மலை முகட்டிலே ஏறி நின்று மாயா மணி விளக்கம் காட்டிய சீர்மையைச் சிந்தையில் கொண்ட மறைமலையடிகளால், பல்லவபுரத்தில் தாம் வாழ்ந்த திருமனையில், சமரச சன்மார்க்க நிலையம் என்னும் அமைப்புக் கண்டு ஆருயிர்ப் பணி செய்தமை சமயச் சார்பு கடந்து, சமயச் சார்பு மல்கி பெருந்தக்க நிலையாகும். அந்நிலையமே அடிகளார்க்குத் தனித் தமிழ் உணர்வு தோன்றிய பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பொருந்திய பெயர் கொண்டு அருந்திறல் செயல்கள் ஆற்றியது.

காலச் சூழல்

அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர், பல் சமய ஆய்வாளர், பல் சமய ஊடகங் கண்டு அதிலே தோய்ந்து தோய்ந்து உரையும் பாட்டும் ஆக்கிய தோன்றல். சீர்திருத்தத் தொண்டிலே சிந்தை ஒன்றியவர்,

அந்நிலையிலேயே சீர்திருத்தமும் சிவனியச் சால்பும் நிரம்பியவர் "தமிழ்க் காசு" எனப் பெற்ற கா. சுப்பிரமணியனார். சீர்திருத்தத்

அக்கால நிலையிலே, முனைப்பான தொண்டிலே ஈடுபட்டதுடன் சாதி சமயங்களை ஆய்ந்து அவற்றின் குறைகளை அஞ்சாமல் பரப்பி அரிமா எனக் கிளர்ந்தவர் தந்தை பெரியார்.

இராசா ராம் மோகனர், அன்னி பெசண்டு அம்மையார், விவேகானந்தர் இன்னோர் தொண்டுகளும் இயக்கமும் நாட்டிலே கிளர்ந்து பரவிய காலச் சூழல். ன்னவெல்லாம்.

அடிகளார் சமய நோக்கின் உள்ளீடுகளாகி உந்தியெழ வாய்த்தவை. கிறித்தவக் கல்லூரிப் பேராசிரிய நிலையும், அச்சமயப் பரப்பாளர் தொடர்பும் அடிகளுக்கு வாய்த்தமையும் கருதத் தக்கதாம்.