உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

179

அடிகளார் மக்கள் பெயர்கள் நீலாம்பிகை, திருஞான சம்பந்தன், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி, திரிபுர சுந்தரி என்பனவாம். இப்பெயர்களும் இவர்களின் மக்கள் பெயர்களும் சிவனியப் பெயர்களாக இருத்தல் அடிகளின் உட்கிடையை விளக்கும்.

அடிகளார்

பொன்னினும், மேலாகப் போற்றிய நூலகத்திற்கு "மணிமொழி நூலகம் என்பது பெயர். "டெடில் மெசின் (T.M.) அச்சகம் என்னும் பெயருக்கு உரிமம் பெற்றிருந்தும், அதனைத் 'திருமுருகன்" அச்சகம் என்று அமைதி கண்டவர்

அடிகள்.

அம்மை அம்பலவாணர் வழிபாட்டை உயிர்ப்பாகக் கொண்டு ஊன்றி நின்றவர் அடிகள். தாம் வாழிடத்து மேலிடத்தை அம்மை அம்பலவாணர் வழிபாட்டுத் திருமாடம் ஆக்கியவரும் அடிகள். இவ்வெல்லாம் அடிகளாரின் சைவச் சார்பினைச் சாற்றுவன.

சமயக் காழ்ப்பர் நிலை :

-

ஒரு சமயக் குடிவழியர் பற்றாளர் - வழிபாட்டாளர், பிற சமயச் சார்வுக்கு இடம் தருவதில்லை. பிற சமய நூல்களைக் கற்றலும் கேட்டலும் கொள்ளார்; பிற சமயச் சால்பினை மேற்கொள்ளல் அரிது.

கோழியைப் பாடும் வாயால் குஞ்சினைப் பாடுவேனோ அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவேனோ" என்று சிவ - முருக வழிபாட்டிலும் வேற்றுமை கண்டோர்களாலேயே, 'அறுவகைச் சமயங்கள்' உருவாகின.

"தான் வழிபடும் இறைவன் பெயர் தவிர மற்றை இறைவன் பெயர், தன் காதில் விழுதலும் ஆகாது; பிற சமயக் கோயிலும் உருவும்கண்ணில் படுதலும் ஆகாது; அத்தெய்வப் படையலைக் கொள்ளலும் ஆகாது" என்று முரட்டு வெறியராய் இருந்தாரும்

உளர்.

உருவ வணக்கம் இழிந்த தென்றும், அதனைக் கொள்வார் அறிவிலார் என்றும் நாளெல்லாம் பழித்த சமயத்தரும், "யாதொரு தெய்வம் உலகுக்கு மாதொரு பாகனை அன்றி" என்று வீறு பேசியும், "பொய்த் தேவு பிற எல்லாம்; எம்மதே மெய்த்தேவு" என்று தருக்கியும் நின்றாரும் உளர்.