உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ் வளம்

22

அடிகளுக்கு எழுந்த போது, நாயகரையே குருவராகக் கொள்ள வாய்ப்பாயிற்று. இவையெல்லாம் அடிகளாரின் சிவனியச் சார்பு விளக்குவன.

அடிகளாரின் 22 ஆம் அகவையில், கொடிய நோய் ஒன்று வருத்தியது. அதனைத் தீர்த்தருளுமாறு "திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை இயற்றினார். இன்ப துன்ப நேர்ச்சிகளில் பெற்றோரைக் கூவிக் கூவி அழைத்த அம்மா,அம்மம்மா, அம்மோ,அன்னா, அஞ்ஞை, அப்பா, அப்பப்பா, அப்பப்போ, ஐயா, ஐயோ, ஐயையோ, அச்சா, அத்தா -இன்ன விளிகளை போல, உள்ளத்தே உணர்வால் உந்தியெழும் இறைமையுணர்வே இன்ப துன்பப் போதுகளில் பாடல்களாக வெளிப்படுதல் உலகறி செய்தி, அதனால் அடிகளார் பாடிய இந்நூல் அவர்தம் சிவனிய அழுத்தம் காட்டும்.

அடிகளார் ஞான சாகரம் (அறிவுக் கடல்) என்னும் இதழ் தொடங்கினார். அதில் "மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்" வெளியாயது. அதன் முதல் இதழிலேயே சைவம், சைவநிலை என்னும் கட்டுரைகள் வெளிப்பட்டன. அடிகளார், திருப் பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் முன்னிலையில் சைவ சித்தாந்த மகாசமாசம் என்னும் அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்தார். அதன் செயலாளராக இருந்து செழுமையான பணிகளைப் பல்லாண்டுகள் புரிந்தார். அதுவே இன்று சென்னையில் மயிலைப் பகுதியில் சைவ சித்தாந்தப் பெருமன்றமாகத் திகழ்கிறது.

சிவஞானபோதம் முதலிய சிவனிய நூல்களில் காணப் படும் கருத்துக்களைத் தெள்ளிதின் விளக்கும் சைவ சித்தாந்த ஞானபோதம் என்னும் நூலை அடிகள் வரைந்தார். அம்பல வாணர் திருக்கூத்தின் உண்மை. பழந்தமிழ்க் கொள்கையே சைவம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா.தமிழர் மதம் என்னும் நூல்களையும் வரைந்தார்.

66

சிவனியச் சீர்மையும் செம்மையும் நோக்கிச் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், வேளாளர் நாகரிகம், தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் முதலான நூல்களையும் கட்டுரைகளையும் வரைந்தார். "சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூலைத் தொடங்கி முற்றுவிக்காமல் நின்றது.

நாடெல்லாம் சென்று அடிகள் செய்த பொழிவுகளுள் பெரும்பாலான சிவனியச் சார்பின. அவை எழுத்துருவிலும் வெளிப்பட்டன.