உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அடிகளார் சமய நோக்கு

அடிகளார் சிவனியச் சார்பு :

நாகப்பட்டினத்தை

அடுத்த

மறைமலையடிகளார் காடம்பாடியில்பிறந்தார். அவர் பிறந்த நாள் 15.7.1876. தந்தையார் சொக்கநாதர். தாயார் சின்னம்மையார். அடிகளாரின் பிள்ளைப் பெயர் வேதாசலம். குடி. வேளாண் குடி. இவையெல்லாம் அடிகளாரின் சிவனியச் சார்பைக் காட்டுவன.

அடிகளார் இளந்தைப் பெயர் ஒன்று, முருகவேள். அது இதழ்களுக்கு என அடிகள் தாமே தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர். நீலலோசனி, பாற்கரஞானோதயம், திராவிட மந்திரி என்னும் இதழ்களில் இப்புனைபெயரால் கட்டுரைகள் வரைந்தார் அடிகள். முருகவேள் என்னும் பெயர் சிவனியச் சார்பாதல் வெளிப்படை.

அடிகளாரின் இளந்தைப் பருவ வழிகாட்டிகளுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். சிவனியப் பற்றில் தலைப்பட்டவர் மதுரை நாயகர். அவர்தம் சிவனியப் பற்றுமை சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகரை நாகை வெளிப் பாளையத்திற்குப் பல்கால் அழைத்துப் பொழிவு செய்ய வைத்தது. நாயகரின் சொற்பொழிவில் வெளிப்பட்ட ஒரு கருத்தை மறுத்து, "சச்சனப்பத்திரிகா" என்னும் கிழமை இதழ் எழுதியது. அவ்விதழின் கருத்தை மறுத்து, நாயகரின் உரை மெய்யுரை என்பதை நாகை நீலலோசனியில் அடிகள் முருகவேள் என்னும் பெயரால் எழுதினார். அக்கட்டுரையே நாயகர்க்கு அடிகளாரை அணுக்கர் ஆக்கியது. அதுவே அடிகளாரைச் சென்னைக்கு அழைத்தது. அதுவே அடிகளாரைத் "துகளறு போதத்திற்கு உரை எழுதவும், அறிஞர் நல்ல சாமி என்பவரால் தொடங்கப் பட்ட சித்தாந்த தீபிகை (உண்மை விளக்கம்) என்னும் திங்கள் இதழுக்கு ஆசிரியராகவும் செய்வித்தது. அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார் தாயுமானவர் பாடல் ஆகியவற்றுக்கு உரை வரைய நேர்ந்தது. பின்னே சைவ சித்தாந்த நூல்களை முறையாகப் பாடங்கேட்க வேண்டும் என்னும் ஆர்வம்