உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

உயர்த்தும் வகை :

195

இழிந்த குடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்குரிய பெயராற் கூறித் தம்மைத் தாமே தாழ்வு படுத்திக் கொள்ளல் ஆகாது. ஒரு தூயவர் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள வழி தேட வேண்டுமே யல்லாமல், பிறர் தம்மை உயர்த்துவார் என்று நம்பியிருத்தலாகாது. ஏனெனில் நம்மனோர் சக்கையைப் பிடித்துச் சாற்றை ஒழுக விடும் பன்னாடையைப் போல்வர். உயர்ந்தவர் ஒருவர் பால் உள்ள குற்றங்களை ஆராய்ந்து அவற்றையே பேசும் நீரர் அல்லாமல் அவர்பால் உள்ள உயர்ந்த நலங்களைப் பேசும் இயல்பினர் அல்லர். ஆதலால் இத்தகைய தீய மக்களிடையே தூயராய் உயர்வார் தமது இழிகுடிப் பிறப்பை யுரையாது தம்மைச் சைவர் எனவும் பார்ப்பனர் எனவும் கூறி ஒழுகுதல் வேண்டும். தம்மொடு உடனிருந்து உணவு கொள்ளாதார் வீட்டில் தாமும் உணவு எடுத்தல் ஆகாது. இம்முறையை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினால்தான் கீழோரில் தூயராய் வருவோர் உயரக் கூடும். இவ்வாறு நாளடைவிற் செய்தே பார்ப்பனரும் சைவரும் உயர்ந்தனர்" என்கிறார்(96)

தமிழ் வழிபாடு :

மும்மொழி வல்லராகிய அடிகளார் தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ்த் தேவார திருவாசகங்கள் ஓதப்படுதலே முறைமை என்பதைப் பேச்சிலும் எழுத்திலும் மிக மிக வலியுறுத்தியவர். தாமே அவற்றை ஓதி வழிபட்டதுடன், ஓதுவா மூர்த்திகளைக் கொண்டும் வழிபட்டவர். அதனையும் தமிழ்ச் சைவர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தத் துணியாமை யைக் கண்டு வருந்தி,

"தமிழர்களாகிய எங்களுக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு வழிபாடு செய்யாமல் எங்களுக்குப் புறம்பான எங்களுக்குத் தெரியாத வடமொழியைக் கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள் என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? என்கிறார் (அறிவுரைக் கொத்து 142) செல்வர் கடமை :

நம் நாட்டுச் செல்வர்கள், தம் செல்வத்தை ஆக்கவழிக்கு உதவாமல் இழிமைக்கு இடமாக்கி வருதலை எண்ணும் அடிகள் மிக இரங்கி உரைக்கிறார்."