உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ் வளம்

228

ஏற்றுக் கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரார் கொல்லோ என்றும் (மேற்படி 58) கூறுகிறார்.

காரைக்கால் அம்மையாரைப் பொருந்தா மணத்தில் சேர்த்தது பிழை என்கிறார் (ப.த.கொ.சை.சமயம் 24)

சுந்தரர் வரலாற்றை விரித்துரைத்து இறைவனே குலமணம் தவிர்த்துக் கலைமணம் சேர்த்தார் என்கிறார் (மேற்படி 25)

அப்பரடிகளும்

அப்பூதியடிகளும்

கலந்துண்டலைக் காட்டுகிறார்.

சாதி பாராது

நமி நந்தியடிகள் ஆரூர்த் திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பிய காலை இல்லுள் நீராடிப் புகக் குளிநீர் அமைக்குமாறு கூறித் திண்ணையில் கண்ணயர, அதுகால் ஆரூர்ப் பிறந்தார் அனைவரும் அடியாராக இருக்கவும் ஆங்கே இழிகுலத் தீட்டுக் கழித்தல் எற்றுக்கு என்று இறைவன் கனவில் உரைக்கக் குளியாதே இல்லுள் சென்றதை எடுத்துரைக்கிறார் (ப.த.கொ. சை.சமயம் 59) சோமாசி மாறனார்க்கு இறைவன் பறைவடிவு கொண்டு பாலித்ததையும் உரைக்கிறார்.

மாலியத்திலும் சாதிப்பாகுபாடு ல்லாமையை அரங்கப் பெருமான் லோக சாரங்கர் கனவில் தோன்றிப் பாண் பெருமாளைத் தோளின் மேல் ஏற்றிக் கொண்டு வருக என அவ்வாறே தோளில் கொண்டு திருமுன் விட்டதைச் சுட்டுகிறார் (60)

திருமழிசையார் திருவாளனால் வளர்க்கப் பெற்றதையும் எடுத்துரைக்கிறார் (60)

இவ்வாறு பல்லபல கூறும் அடிகளார், "நீ தேவாரம் ஓதி என் செய? திருவாசகம் படித்து என் செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்று இல்லையே!

பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பாரைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்கிறாய். அப்படியானால் பிறவற்றைக் கிட்டே சற்றும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னும் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என் றன்றோ சொல்லல் வேண்டும்?" என்று கடிந்துரைக்கிறார். (65)

இழிகுடியாகக் கருதப்படுவோர் தாம் செய்ய வேண்டும் செயற்பாடுகள் இவை எனவும் அடிகள் உரைக்கிறார்.

இை