உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் ன

193

துணராது. அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை.

"ஊரின் நடுவே வெடிமருந்துக் கொத்தளத்தின் மேலிருந்து கொள்ளிக் கட்டையைச் சுழற்றி மகிழ்வோனுக்கும்நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக் கொத்தளத்தை வெடிக்கச் செய்து அவனையும் அவ்வூரிலுள்ளார் அனைவரையும் சிறிது நேரத்தில் படு சாம்பராக்கி விடுவது போலப் பாழுஞ் சாதி வேற்றுமையால் இனியுண்டாவதற்கு மும்மரித்து நிற்கும் ஒரு சிறு கலகமானது நுங்களையும் நுங்கள் இறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடுகளையும் எளிதில் மாய்த் தொழிக்குமேயென அஞ்சுகின்றேம். வெள்ளம் வருவதற்கு முன்னரே அணை கோலி வைத்தல் அறிவுடையார் செயலாதல் போலப் பெருந்தீமைக்கு ஏதுவான கலகம் வருவதற்கு முன்னமே அதனை வருவிக்கும் சாதி வேற்று மையினைத் தொலைத்து விடுங்கள் என்று சாதி வேற்றுமை கோடரியாய்க் குல அழிவையும் நாட்டழிவையும் செய்வதை உருகி உருகி உரைத்து உய்யும் வழியாவது அதனை ஒழிப்பதே என்று வலியுறுத்துகிறார் (மேற்படி 88-9)

சைவ வேளாளர் சாதி வேற்றுமை பாராட்டலால் அவரும் தாழ்த்தப்பட்டவராக்கப் பட்டமையை எடுத்துரைக்கிறார்:

"தமக்கு உதவி செய்யும் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல கொடுமை களைச் செய்தமையால் அன்றோ சைவ வேளாளராகிய தாமும் பார்ப்பனரால் இழிவு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரரானார். "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படா தன்றோ என்பது அது (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் - 28)

ஆரியர்க்குள்ளும் முந்து வருணப் பிரிவு இருந்ததில்லை என்றும், இருக்கு முதல் ஒன்பது மண்டிலங்களில் வருணச் செய்தி இல்லை என்றும் அவர்கள் இந்திய நாட்டுள் புகுந்து தம்மை வெண்ணிறத்தர் எனவும் கருநிறத்தவரொடு போரிட்ட காலையில் வருணம் தலைகாட்டியது எனவும் விளக்குகிறார் (Coung 30-32)

'பாணரை நம் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநீல நக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும் அவ்வருமையைத் தீவடிவில் இருந்த ஆண்டவன் (வலஞ்சுழித்து)