உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

என்கிறார். பலகுடிக் கலப்பு இல்லாமல் ஒரு குடியிலேயே கொண்டு கொடுத்தலால் உண்டாகும் தீராக் கேடுகளையும் தெளிவாக உரைக்கின்றார் :

புதுநீர்

வரத்தின்றிப்

பழைய

கட்டுக்கிடைத் தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து நோய்ப் புழுக்களை உண்டாக்கி யார்க்கும் பயன்படாமல் வரவர வற்றி வறண்டு முடிவில் நீரற்றுப் போதல் போல அகல உள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லவராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடம் கொடாத போலிச் சைவக் குடும்பத்தினரும் தமது வலிவிழந்து பழைய இரத்தம் கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு தாமும் இருந்த இடம் தெரியாமல்சில காலத்தில் மாய்ந்து போகின்றனர் என்கிறார். கடுஞ்சாதிப்பற்றால் விளையும் கொடும்பாடுகளை மூலங்கண்டு உரைக்கும் முடிவு ஈதாகும் (மேற்படி 81-82)

மேலும், "மேற்சாதியார் எனக் கூறிக் கொள்ளும் ஓ இரக்கமற்ற இந்து மக்களே! நீங்கள் (உங்களுக்கு ஒப்பாகிய மக்களை) ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங்களினும் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரை வயிற்றுக் கூழுணவு கூடக் கிடைக்காமல் செய்தும், அவர்களில் ஆண்மக்களாயினவர் கோவணத்திற்கு மேல் ஒரு சிறு கந்தைத் துணி கூட உடுக்கவிடாமலும், அவர்களிற் பெண்மக்களாயினவர் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங் கூட மனம் பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாய் இருக்கக் கல்வியறிவு தானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற் படைக்கப்பட்ட அம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள்பால் எல்லா வகையான வேலைகளையும் வாங்கி வந்தீர்கள். நுங்களுடைய அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற் பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கில நன்மக்களையும் அவர் வழியே கிறித்துவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள் புரிந்தான்" என்கிறார் (மேற்படி 88),

"ஐயோ! இந்து மக்களே, ஓ போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே. நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடறியாய்ச் சாதி வேற்றுமை இருப்ப