உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

16.

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

201

தொழில் வேற்றுமையால் உண்டான குலவேற்று மையையே பெரிது பாராட்டித் தமிழ்மக்கள் தம்முள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித்தனி வெவ்வேறினங்களாய்ப் பிரிந்து வலிவிழந்த துன்ப வாழ்க்கையில் கிடந்துழல்வது நிரம்ப வருந்தத்தக்கதாய் இருக்கின்றது.

ஊனுண்ணாச் சைவ ஒழுக்கத்தினின்றும் தாம் சிறிதும் வழுவுதல் ஆகாது.

காதலன்பைக் கருதாமல் செய்யும் போலி மணத்தை அறவே ஒழித்து விடல்வேண்டும்.

(மக்களுக்குச்) செல்வப் பொருளைத் தேடித் தொகுத்து வைக்கும் பெற்றோர், அவர்க்குத் தீமையே செய்பவர் ஆவர்.

செலவுக்கு மேற்பட்ட பொருளைத் தனித்தமிழ்க் கல்லூரி வைத்துக் கற்பித்தற்குக் கொடுத்தல் வேண்டும். வரை துறையின்றி உணவளிக்கும் அறம் பயன் தரா. உறுப்பறைகட்கும், பிணிப்பட்ட ஏழைகட்கும், கல்வி பயிலும் எளிய மாணவர்க்கும் நூல் ஓதுவிக்கும் வறிய ஆசிரியர்க்கும், புதியன பழையன ஆராய்ந்து பல துறைகளிற் பயன்படும் நூல்கள் இயற்றும் நூலாசிரியர் கட்கும், சொற்பொழிவு நிகழ்த்தும் நாவலர்க்கும், தவவொழுக்கத்தில் நிற்கும் துறவிகட்கும் உணவும் பொருளும் வேண்டுமட்டும் உவந்து நல்குதலே உண்மையான அறமாகும்.

முழுமுதற் கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒரு சிறிதும் நெகிழலாகாது.

பிறப்பு இறப்புகளிற் கிடந்துழன்ற சிறு தெய்வங் களையும் கண்ணன் இராமன் முதலான அரசர்களையும் கடவுள் நிலையில் வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங் குற்றமாய் முடியும்.

திருக்கோயில்களை விட மக்களுக்கு உறுதிபயக்கக் கூடியது வேறெதும் இல்லை.

வழிபடும் முறைகளும் வடநாட்டைவிடத் தென்னாட்டின் கண்ணேதான் சிறந்தனவாய் நடைபெறுகின்றன.