உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

17.

18.

19.

இளங்குமரனார் தமிழ் வளம்

228

வடநாட்டுக் கோயில்களில் மக்கள் தாமே நீரும் பூவும் இட்டு வணங்குகிறார்கள். தென்னாட்டு முறை எவ்வளவோ நலந்தருவதாய்க் காணப்படுகின்றது. சிறிதும் மாற்றாமல் நடப்பித்தலே வேண்டற்பாலது. கோயிலுக்கு வழங்குவது உண்மையில் வீணாகுமா? இல்லறத்தார் வேறு துறவறத்தார்வேறு என்னும் தவறான கருத்தை நம் தமிழ்மக்கள் அறவே ஒழித்து விடல் வேண்டும். (தமிழர் மதம் 260-76)

என்பவை அவை.

மேலும் தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்து வணங்கி வருதல் வேண்டும் என்பது தமிழர்தம் முதற்றெய்வக் கொள்கை என்கிறார் அடிகள் (த.ம. 73)

அதிலிருந்து முளைத்துக் கிளைத்தவையே அம்மை அம்பலவாணர் வழிபாடு என்று விரித்துரைக்கிறார் அடிகள்.

பன்மனைவியர் மணம் சமயச் சால்புக்கும் ஆடவர்மகளிர் நலத்திற்கும் தக்கதே என்றும், அது பெண்ணிழிமையாகாது என்றும் விரித்துரைத்தல் காலத்தொடும் கருத்தொடும் இயைவதன்றாம். வள்ளுவ நெறியும் ஆகாதாம் (த.ம.56 -63க)

வேண்டாத அளவுக்கு மக்களுக்குச் செல்வம் சேர்த்து வைத்தலின் தீய விளைவுகள், மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குதல் ஆகியவற்றைக் கடிதல் கருதிப் போற்றத் தக்கவையாம் (த.ம. 67-8)

66

அகப்பாடல்கள் உரைக்குமாறு தம்மவருள் தாய்மாரே முன்னின்று மணச்சடங்கு செய்ததே தொல்காப்பியரால் 'கரணம்' எனப்பட்டது என்பதும், கரணம் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுவதும் இனிய செய்திகள் (த.ம.188 - 40) அந்நெறியில் தம் குலத்தவரைக் கொண்டாவது கடைப்பிடிக்கத் தக்கதாம். (த.ம.193)

'தனித்துறவில் புகுந்தவர் அதில் உறுதியாய் நிற்றல் தம்மால் இயலாதெனக் கண்டால் மீண்டும் மணம் செய்து கொண்டு தவஞ்செய்தலையே மேற்கொள்வாராக” என்றும் 'துறவொழுக்கத்தை மேற்கொண்டார் எவரும் எவரையும் இரந்து உணவும் உடையும் பொருளும் பிறவும் பெறுதல் சிறிதும் ஆகாது" என்றும் தவச் சீர்திருத்தமாகக் கூறித் தமிழர் மத ஆய்வை நிறைவிக்கிறார் அடிகள்.