உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனீ :

3. தமிழ்த் தேனீ

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" என்பது றையனார் பாடிய குறுந்தொகைப் பாட்டு.

"தும்பி சேர்கீரனார்" என்பது சங்கப்புலவர் ஒருவர் பெயர். அவர் பெயர் "தும்பைச் சொகினனார்"என ஆய்வுத் தும்பி ஒருவர் கூறுவார்.

எத்தனை எத்தனையோ கல் தொலைவு சென்றும் தேன் எடுத்து வருதல் தேனீக்கு இயற்கை; அவ்வாறு எடுத்த தேனையும், தன் இனத்துக்கும் உலகுக்கும் பயன்படுமாறு கூட்டில் சேர்த்து வைத்தலும் தேனீக்கு இயற்கை. அவ்வாறே தேர்ந்த அறிஞர்களும் நூல்களைத் தேடிக் கற்பதுடன், கற்பார்க்கு நூல்கள் ஆக்கிப் படைத்தும் அருந் தொண்டாற்றுகின்றனர். அவ் வகையில் கற்பன கற்றுப், பிறர் கற்றுத் தெளிய நற்றமிழ் நூல்கள் பலப்பல துறைகளில் ஆக்கிப் படைத்தவர் நிறை மலையாம் மறைமலையார்!

பொதுநிலைக் கல்வி :

பள்ளிக் கல்வி என்பது திட்டப் படுத்தப்பட்ட ஓர் அளவு உடையது. தரத்தில் குறைந்த மாணவர்களுக்கும் தரத்தில் ஒத்த மாணவர்களுக்கும் கற்கும் வகையால் ஒரு பொது அளவுத் திட்டம் கொண்டது; அப் பொது அளவு, சிறப்பு முயற்சியும் ஆர்வம் பெருக்கும் உடைய மாணவர்க்குப் போதுமான அளவினதாக அமைதல் இல்லை. அப்படி அமைந்தால் முன்னுரைத்த இருவகை மாணவரும் "கல்வியை வேம்பாய் எண்ணிக்" கை விட்டு விடவே செய்வர்! கல்வியின் மேல் தீராக் காதல் கொண்ட அடிகளார் போன்றவர்க்ப் பள்ளிக் கல்வி போதாது எனினும் பள்ளிக்கு வெளியே வாய்க்கும் விரிவுக் கல்வியைப் பெற்றுக் கொள்ளத் தடையில்லையே! உரிய கல்வியைக் கற்கவே வெளியேயும் தனிப்பாடம் படிக்க வேண்டிய நிலையர்க்குப் பாடச்சுமை மிகுதியானால் என் செய்வர்? படிப்புக்கே முற்றிலும் முழுக்கத்தானே போட்டு விடுவர்?