உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

15

நாராயணசாமி :

நாகப்பட்டினத்தில் அந்நாளில், மறைமலையாரின் நற்பேற்றால் வாய்த்தவர் போல் நாராயணசாமி என்பார் ஒருவர் இருந்தார். அவர் பொத்தக வணிகர்; ஆனால் அவர் வணிகர் மட்டும் அல்லர்; வண்டமிழ்ப் புலவர்; பொருள் வாணிகத்திலும் புலமை வாணிகத்தைப் பெருக்கமாகச் செய்துவந்த பெரும் புலவர்.அவரைப் பேராசிரியர் எனலும். பேராசிரியர்க்குப் பேராசிரியர் எனலும் தகும். சங்க காலத்தில் விளங்கிய கூலவாணிகர், பொன் வாணிகர், அறுவை வாணிகர் என்னும் புலமையாளர் ஒப்பத் திகழ்ந்த பொத்தக வாணிகர்!

நாராயணசாமியார், அந்நாளில் 'நடமாடும் சுவடிச் சாலை, என்றும், 'பல்கலைக் குரிசில் 7' என்றும், 'வாழும் கம்பர்' என்றும் பாராட்டப்பட்ட பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனாரிடமும், ஐந்திலக்கணம் வல்ல பெரும் புலவர் உறையூர் முத்துவீர உபாத்தியாயரிடமும் கற்றுத் தெளிந்த தேர்ச்சியர்.

கற்ற தேர்ச்சி இத் தகையதானால் கற்பித்த தேர்ச்சி இதனையும் வெல்ல வல்லதாம். நாடக இலக்கியத் தந்தை என்று பாராட்டப்படும் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்க்கும் நாகூர்ப் பெரும் பாவலர் வா குலாம் காதிறு நாவலர் அவர்களுக்கும் கற்பித்தவர் இவர் என்னின் இக் 'கடை வணிகர் தமிழின் தலைவணிகர்' என்பதற்கு ஐயமுண்டோ?

இளந்தைக் கல்விப் பொழுதிலேயே

நாராயண சாமியாரின் புலமைப் புகழைக் கேள்வியுற்றிருந்த மறைமலையார் அவரை அடுத்துக் கற்றார்.

கலை ஞாயிறு :

கல்வி

பதினான்காம் அகவை தொட்டே பள்ளிக் நின்றமையாலும், ஆசிரியரும் வணிகத் தொழிலொடு கற்பிப்பவராகவும் இருந்தமையாலும், அடிகளார் பெரும் பொழுதைத் தனியே கற்றலிலும் செலவிட்டார். ஐயப்பாடுகள் உற்றபோது ஆசான் துணை நாடும் அளவு போதுமானதாக இருந்தமையால் அடிகளார் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தோராம் அகவைக்குள் கற்றுக்கொண்ட ஆறாண்டுக் கல்வி அவரைக் 'கலை ஞாயிறு' என விளங்கச் செய்தது. அவர் அவ்வகவையிற் பெற்ற கல்வியைத் தாம் இயற்றிய திருவொ ற்றியூர் முருகர் மும்மணிக்கோவை முகப்பில் குறிப்பிடுகிறார் :