உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

முருகவேள் :

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

சோமசுந்தர நாயகர் செய்த பொழிவைப் பசித்தவர்க்கு வாய்த்த பல்சுவையுணவென்ன, மறைமலையார் தவறாமல் கேட்டு வந்தார். அதனாற் சிவநெறிச் சீர்மை அவருள்ளத்தில் ஆழப் பதிந்தது. இந் நிலையில் நாயகர் கூறிய ஒரு கருத்தை மறுத்து அந்நாளில் வெளிவந்த 'சச்சனப் பத்திரிகா' என்னும் கிழமைத்தாளில் ஒருவர் கட்டுரை வரைந்தார். அதனைப் படித்த மறைமலையார் மறுப்புக் கட்டுரையாளர் கொண்ட மயக்கவுணர்வையும் அவர் மறுப்புக் கட்டுரையில் அமைந்த வழுக்களையும், நாயகர் கருத்தின் நயத்தையும் உரைத்து 'நாகை நீலலோசனி' என்னும் இதழில் 'முருகவேள்' என்னும் புனைபெயரில் மறுப்புக்கு மறுப்பு வெளியிட்டார்.

.

நீலலோசனிக்

கட்டுரையை நாயகர் படித்தார்; கட்டுரையின் நடையும் ஓட்டமும் கருத்துமாட்சியும் அவரை வயப்படுத்தின. அவர் வியப்புற்று அக் கட்டுரையாளரை அறிய அவாவினார். தம் கருத்தை மறுக்கத் துணிந்தாரைத் தாம் அறியாமலே மறுத்து நிலைநாட்டியவர் ஒருவர் உள்ளார் என்றால் அவரை அறிய அவாவுண்டாதல் இயற்கைதானே அதனால், மதுரை நாயகத்திற்கு நாயகர் எழுதினார். அதற்கு விளக்கம் வரைந்தார் நாயகம். அதனால் வேதாசலம் (மறைமலை) என்னும் வளர்பயிரின் பெயர் நாயக முகிலின் நெஞ்சில் பதிவதாயிற்று! பதிவுற்ற சூழல் இது.

மீண்டும் ஒருகால் நாகைப்பொழிவுக்கு வந்த நாயகர் மறைமலையைக் காண விரும்பினார். மதுரை நாயகர் மறைமலையை நாயகர்க்கு அறிமுகப்படுத்தினார்!

>

அறிமுகம் வியப்பாயிற்று! திகைப்பாயிற்று! விம்மிதமும் ஆயிற்று! கட்டுரையின் ஆழமென்ன! விரிவென்ன! அதனை எழுதியவர் முதுவர் அல்லாத இவ்விளைஞரா! நரைமுடியாமலே சொல்லால் முறை செய்த கரிகால் வளவனின் மறுவடிவம்தான் இவ் விளைஞரோ என எண்ணினார். தாம் போற்றி வணங்கும் மெய்கண்டாரும் ஞானசம்பந்தரும், குமரகுருபரரும் இப்படித்தான் ளந்தையில் இருந்திருப்பரோ என என உள்ளுள் வியந்தார்! வினாக்கள் சிலவற்றை எழுப்பி அவர்தம் புலமை நலம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட நிலையில், மறைமலை உடனுக்குடன் வழங்கிய மறுமொழிகள் அவர்தம் கல்விப் பரப்பைக் காட்டுதலால் இவ் விளைஞர் புலமைத்திறம் இந்நாட்டுக்குப்