உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

23

இரண்டரைத் திங்கள் திருவனந்தபுரத்தில் பணியாற்றினார் அடிகளார். அவ்வூர்ப் பருவநிலை அடிகள் உடல் நிலைக்கு ஏற்று வாராமையால் தம் பணியை விடுத்து நாகைக்கே திரும்பினார்.

துகளறுபோத உரை :

அடிகளார் நாகைக்குத் திரும்பியது அறிந்த சோம சுந்தர நாயகர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச் செய்த 'துகளறு போதம்' என்னும் நூலை விடுத்து, அதற்கு உரை வரையுமாறு கட்டளையிட்டார். அந் நூலின் நூறு பாடல்களுக்கும் சீரிய உரையெழுதி நாயகர்க்கு அனுப்பினார் அடிகளார். அவ்வுரையின் நடை நயம், பொருட் சிறப்பு ஆகியவற்றைக் கண்ட நாயகர் "மாதவச் சிவஞான முனிவர் உரையொடும் ஈதொப்பது” எனப் பாராட்டி, அந் நூலைத் தம் செலவில்தாமே வெளியிட்டார்.

முதற்குறள் வாத நிராகரணம் :

அந் நாளில் சென்னையில் வாழ்ந்த ஒருவர் திருக்குறள் முதற்குறளுக்கு 'மாயாவாதக் கொள்கை'யின்படி 'முதற் குறள் வாதம்' என்பதொரு நூலை இயற்றி வெளியிட்டார். அதனை மறுக்க வெண்ணிய நாயகர் மறைமலையாரை எழுதத் தூண்டினார். அதன்படி, 'முதற்குறள் வாத நிராகரணம்' என்பதொரு நூலை அடிகளார் இயற்றினார்.

உண்மை விளக்கம் :

நாயகரிடம்

கொண்முடிபு

(சித்தாந்த)ப்பாடம் கேட்டவருள் ஒருவர் நல்லசாமிப்பிள்ளை என்பார். அவர் சிவஞான போதநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். அவர் சித்தூரில் மாவட்ட உரிமை மன்ற நடுவராகப் பணிசெய்து வந்தார். அவர்க்குச் சிவணியக் கொள்கைகளைத் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிகளின் வழியாகவும் பரப்புதல் வேண்டும் என்னும் பெருவேட்கை இருந்தது. அதனால் 'சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம்' என்னும் மாதிகை (திங்களிதழ்) தொடங்கினார். அவ்விதழைத் தம்மோடும் இருந்து நடாத்தத் தக்க புலமைச் செல்வர் ஒருவரை வேண்டி நின்றார். நல்லசாமியாரையும் மறைமலையாரையும் தம் மாணவராகக் கொண்டு இருந்த சோமசுந்தரநாயகர், இருவர்க்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சித்தாந்த தீபிகையின் தமிழ்ப் பதிப்புக்கு