உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ் வளம்

228

மறைமலையடிகள் ஆசிரியராய் முதல் இதழ் 1897 ஆம் ஆண்டு சூன் திங்கள் 21ஆம் நாள் வெளிவந்தது. அதன் முதல் ஐந்து இதழ்கள் அளவுக்கே அடிகள் ஆசிரியராக விளங்கினார். அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு என்பன வெல்லாம் தொடர் கட்டுரைகளாக வெளிப்பட்டன. காதல் மணமும் கலைமணமுமாம் இம் 'மணமலர்', 'பூஞ்சோலை'ப் பரப்பாகிப் பொலிதலைக் காண்போம்.

ம்