உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம்

228 பயிற்சி தருதலையும் மேற்கொண்டது. அவ் வகையில் பொதுநிலைக் கழக மாணவராகிப் பின்னாளிலும் தத்தம் இயலால் தொண்டு புரிந்தவர்கள் சிலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பாலசுந்தரம் எனவந்து இளவழகனார் ஆகி அழகரடிகளாய் மதுராந்தகம் திருவள்ளுவர் குருகுலம் கண்ட பெருமகனார்; இளம் பருவத்திலேயே அருட் பெருந்தொண்டுக்கு ஆளாகி, நன்மணம் பரப்பும் காலத்திலேயே மறைந்த மணி.திருநாவுக்கரசர்; புதுக்கதைகளால் புகழுற்ற நாகை சொ. கோபாலகிருட்டிணர்; அவர் உடன்பிறப்பாகித் திருக்குறள் அறத்துப்பாலுக்கு அரியதாம் உரைவிளக்கம் கண்ட நாகை சொ. தண்டபாணியார், மகளிர் விடுதலை, சீர்திருத்தம், நாட்டுத் தொண்டு இவற்றில் அருந்தொண்டாற்றிய சிறந்த எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணனார்; நயன்மை (நீதி)க்கட்சியின் நாளிதழ் கனக சங்கரக்கண்ணப்பன் என்பார்.

இதுகாறும் குறிப்பிட்டதும் இதனினும் விரிந்ததாகக் குறிப்பிடாததுமான பொழிவுப்பணிகளும் எழுத்துப் பணிகளும் குமுகாயப் பணிகளும் கல்லூரிப் பணியின் இடை இடையே நடைபெற்றவையாம். முற்றாகப் பொதுப் பணிக்கே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வேலை விடுதல் :

"கலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலமே போதும்; தாய்மொழியைக்கட்டாயப் பாடமாக மாணவர்கள் கற்க வேண்டுவதில்லை; விருப்பமுடையவர் படிக்கலாம்; விருப்பமில்லாதார் ஆங்கிலந் தவிர வேறு மொழியை எடுத்துப் படிக்கலாம்" எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினர் முடிவு செய்தனர்.

அதனிடையேயும் மற்றொரு தீர்மானமும் வந்தது. "தாய்மொழிகளை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்தையும் வடமொழியையும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும். தாய்மொழிகள் விருப்பப்பாடம் ஆகலாம்" என்பது அது.

அத் தீர்மானம் வரும்போது தமிழர் அனைவரும் வாளா வாய் பொத்தி இருக்கவும் ஆங்கிலவர் ஒருவர் எழுந்து "சிறந்த இலக்கியங்களைக் கொண்ட தமிழ் முதலிய தாய்மொழிகள் கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்றால் ஒருவராலும் பேசப்படாது வாக்கில் இல்லா வடமொழி மட்டும் கட்டாயப்