உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

37

"எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும் சமரச சன்மார்க்கத்தையும், பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவர். அச் சுவாமிகள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையுமே எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்குகூட்ட வேண்டி அச் சுவாமிகள் இட்ட பெயராலேயே சன்மார்க்க நிலையம்' என்னும் இது தாபிக்கப்படலாயிற்று. இந் நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார். பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள்" என்பது அது.

சமரச

வள்ளுவர் உள்ளமே வள்ளலார் உள்ளமாகப் பிறங்கியது என்பதைத் தெள்ளத் தெளிந்த தேர்ச்சியால் அடிகளார் வ்வாறு தலைத் தலைமையையும், வழித் தலைமையையும் கொண்டார் என்க.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'

என்னும் வள்ளுவர் வழியதுதானே வள்ளலார் வழி! அவர்தம் அருளுடைமைத் திருவடிவம்தானே வள்ளலார்! ஒருமைக்கண் தான் கற்ற கல்வி தானே வள்ளலார்க்கு வாய்த்த ஓதாக்கல்வி!

சமரச சன்மார்க்க சங்க நோக்கங்கள் இவை எனவும் ஞான சாகரத்தில் குறிப்பிடுகிறார் அடிகளார்.

"எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டும் சீவகாருண் ணியத்தை விளக்கும் முகத்தால் கொலை நிறுத்தல், புலாலுணவு விலக்கல்'

"எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே என்று வலியுறுத்தி அவரை அடைதற்கு அன்பு ஒன்றே வழியெனக் காட்டுதல்”

ஏழைகட்கும் வலியற்றவர்கட்கும் அன்னம் இடுதல்' ஏழைப் பிராணிகட்குத் தீனி கொடுத்தல், எவ்வுயிரையும் கொடுமையாக நடத்தலினிநின்றும் காத்தல் - என்பன அவை. பொதுநிலைக் கழக மாணவர்கள் :

சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பொதுநிலைக் கழகம் இருபான் ஆண்டுகள் இயன்ற பணியாற்றியது. ஆங்காங்குச் சொற்பொழிவாற்றியதுடன், தக்க மாணவர்களைத் தெரிந்து